பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 42 சு. சமுத்திரம் விட்டார். மோகினியால் அழ முடியவில்லை. கண்ணிரும் வரவில்லை. குழந்தைக்கு அருகே குத்துக்காலிட்டு உட்கார்ந் தாள். அம்மாக்காரி தட்டுத் தடுமாறி வந்து, ஈரத்துணி களால் பேத்தியின் நெற்றியில் ஒத்தடம் கொடுத்தாள். கலா லேசாகப் புலம்பத் துவங்கினாள். மோகினியால் தாள முடியவில்லை, டாக்டரிடம் போகப் பணமில்லை. கணவனைச் சபித்துக் கொண்டாள். ஆமை என்று எந்த நேரத்திலோ வாயைத் திறந்து வார்த்தை பலிக்கும்படி செய்த அவன் அப்பாவைத் திட்டிக் கொண்டாள். காலி செய்யாமல் சண்டித்தனம் செய்யும் அடையாறு வாடகை வகையறாக்களைத் திட்டிக்கொண்டாள். அவர்களைக் காலி செய்துவைக்க ஆளில்லாமல் போன தன் அவல நிலைக்காகத் தன்னையே திட்டிக்கொண்டு, தலையிலும் அடித்துக் கொண்டாள். அந்தச் சமயத்தில் பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரம் அங்கே வந்தார். எதையோ, சொல்ல வந்தவர், நிலைமையைப் புரிந்து கொண்டு, சீக்கிரமா... குழந்தையை ஒரு டாக்டர்கிட்ட அழைச்சுப்போகலாம். நல்லவேளை... என் கார்லயே வந்தேன்’ என்று அவர் சொல்லி முடிக்கு முன்னாலே, மோகினி குழந்தையைத் துாக்கி, தோளோடு சேர்த்து அனைத்துக் கொண்டாள். இருவரும் குழந்தையுடன் காரில் பறந்தார்கள், டாக்டர் குழந்தைக்கு ஒரு ஊசி போட்டு, மாத் திரைகளை எழுதிக் கொடுத்தார். வழியில் சுந்தரம் மாத் திரைகளை வாங்கிக் கொண்டார். மோகினி தன் இயலாமையை நினைத்து, வெட்கித் தலைகுனிந்தாள். அதேசமயம், கலா லோாகக் கண்ணை உருட்டி அவள் தோளைத் தட்டியதும், அவளுக்குத் தெம்பு பிறந்தது. சுந்தரத்தை நன்றியோடு பார்த்தாள்.