பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 மீண்டுமொரு முறை நியாயம்' சஞ்சிகையை வெளிக் கொணரும் பொறுப்பு மோகினியிடம் வந்தது. அதை அவளிடம் சுந்தரம் கொடுத்திருந்தார். அனுபவமில்லாத மோகினி அந்த இதழைக் குட்டிச்சுவராக்கியிருந்தாள். ஜெனரல் மானேஜர் லீலாவைக் கூப்பிட்டனுப்பிக் கோபத்தில் குதித்தார். அட்டையில் வெளியாகியிருந்த அவருடைய படம் ஒரே கறுப்பாக இருந்தது. வாசகர்கள் அதைக் கேலி செய்து கடிதம் போட்டிருந்தார்கள். விரக்தியாக வந்த லீலாவைப் பார்த்ததும், வழக்கம் போல் அவர் புன்னகை செய்யவில்லை. அவள் குட் மார்னிங்"கிற்கு, இவர் நோ... நோ... பேட்... பேட்' என்றார். கூப்பிட்டீங்களாமே ஸ்ார்... யெஸ்...இந்த இதழ் ஏன் இவ்வளவு மட்டமா இருக்கு? ஒங்களெல்லாம் ஒரே இடத்துல வைக்கறது தப்பு. இனிமே இதை மோகினிகிட்ட ஒப்படைக்கப் போறேன்!” லார். இது மோகினியோட..." நோ எக்ஸ்பிளனேஷன். நோ நொண்டிச் சாக்கு. ஸார்... நான் சொல்றதக் கொஞ்சம்...' இதுக்கு மேல பேசினா ஐ வில் சஸ்பென்ட் யூ. தப்பை ஒத்துக்காமல் கூடக்கூடப் பேசினா என்ன அர்த்தம்?" சதப்புதான் ஸார்...'