பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 க. சமுத்திரம் • நான் என்ன ஸார் பண்ணட்டும்... லீலா எக்ஸிபீரியண்ஸ்ட் ஜர்னலிஸ்டாச்சேன்னு சூப்பர்வைஸ் பண்ணல ஸார்: அதோட நான் சொன்னாலும் அவள் கேக்கிறவளாய்த் தெரியல ஸார்: ஜி. எம். போட்டோவையாவது ஒழுங்கா போடும்மான்னு சொன்னா, ஜி. எம். என்ன சூப்பர் மேனான்னு திரும்பிக் கேக்குறாள் லார்! அவளுக்கு சங்கர் கூடக் கொட்டம் அடிக்கவே டயம் சரியா இருக்கு ஸார்! ஐ...ஆம் ஸாரி ஸார்... என்னால அவளைக் கண்ட்ரோல் பண்ணமுடியாது ஸார்! மோகினின்னா நான் சொல்றதைக் கேட்பா ஸார்! என்ன சொன்னாலும் சரிம்பாள் ஸார்!’’ என்று ஜி. எம்மிடம் சொல்லிவிட்டார். பழைய விரோதி யான சுந்தரம், தன்னைப் புதிய முறையில் லார்' என்றதை * ஸர்' பட்டமாக நினைத்து மகிழ்ந்துபோய்விட்டார் ஜெனரல் மானேஜர். இடையில் நடந்த இந்த பாலிடிக்ஸ்’ லீலாவுக்குத் தெரியாது. அவளுக்குக் குங்குமம் வைக்கவும், ஒழுங்காக நடந்துகொள்ளவும் மட்டுமே தெரியும். அவளுக்கு ஒன்றும் ஒடவில்லை. நீதிக்கு அடிக்கடி ஜூரம் வரும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் இப்படி ஒரேயடியாக அது செத்துவிடும் என்று அவள் நினைக்க வில்லை. விவரங்களைப் புரிந்துகொண்ட பல பியூன்கள் தங்களுக்குள்ளேயே மாநாடு கூட்டி முணுமுணுத்தார்கள். டெப்திரி ராமன் மட்டும், மோகினியும் சுந்தரமும் ஜோடி யாக வெளியேறியதைப் பார்த்ததும் சிறிது இடைவெளி கொடுத்து, ஆடாமல் அசையாமல் பிணம் மாதிரி உட்கார்ந் திருந்த லீலாவைப் பார்த்துக்கொண்டே, ஆபீஸருங்களுல, நூத்துக்கு தொண்ணுாற்றொம்பது பேரு பொம்பிளப் பொறுக்கிங்க...' என்று லேசாகத்தான் பேசினான். லீலா எதுவும் பேசுகிறாளா என்பதை அறிவதற்காக, போவது மாதிரி போக்குக் காட்டிவிட்டு, சட்டென்று உள்ளே வந்த மோகினியின் காதுகள் டெப்திரியின் வாசகங்களை நன்றாக வாங்கிக்கொண்டன.