பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 50 சு. சமுத்திரம் அளிஸ்டென்ட் பப்ளிஸிட்டி மானேஜர் சங்கர், தலையில் கை வைத்துக்கொண்டு, அழுது ஒய்ந்தவன்போல் இருந்தான் . மானேஜர் கொடுத்த அவமானத்தை, தன்மானம் ஒரு பக்க மும் கோழைத்தனம் ஒரு பக்கமுமாக அவனை அலைக் கழித்தபோது, மோகினி அவனருகே உள்ள நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, "ஐ அம் ஸாரி ஸார் அவரு ஒங்களை அப்படிப் பேசியிருக்கக் கூடாது... எனக்கு அழுகையே வந்துட்டுது. மகா முரடனா இருக்காரே! வாங்க காபி சாப் பிட்டு வரலாம்' என்றாள். சங்கர் அவளிடம் கொஞ்சம் இன்ட்டரஸ்ட் காட்டி னான். பிறகு இருவரும் கேன்டீனுக்குப் போனார்கள். மோகினியின் அருகாமை தந்த ஆதரவாலும், கொஞ்ச நேரமானபடியாலும் மானேஜரின் சுடுசொல்லைப் பெரிதாக எடுக்காமல் அவன் இருந்தபோது, அவள் அந்த ஆள் கிடக் கார்... அது ஒங்கள நாபின்னு சொன்னதை பெரிசா எடுத் துக்காதிங்கோ' என்று ஞாபகப்படுத்தினாள். இப்போது அதை சங்கர் மிகப் பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டவன் போல் தலையில் கை வைத்துக்கொண்டே புலம்பினான். எனக்கே ஒண்ணும் புரியமாட்டேங்குது. இப்ப ரெண்டு மூணு மாசமாத்தான் அவரு திட்ட ஆரம்பிச் சிருக்காரு. அடிக்கடி எருமைத் தலையன்கிறார். பொண் டாட்டிகிட்ட ஒத வாங்குவேங்குறார். நான் எழுதற. எல்லாத்தையும் அடிச்சிட்டு திருப்பி எழுதச் சொல்றார். மனுஷனுக்கு ஹிஸ்டிரியா வந்திருக்குமோ?" விட்டுத் தள்ளுங்க லார்! நம்ம டயம் சரியில்லன்னா நல்லவங்களும் விரோதியாகிடுவாங்க! ஆகாத காலத்துல... கால்பட்டா குற்றம். கைபட்டா குற்றம். ஆமா, நீங்க என்ன ராசி?’’ • தனுசுன்னு தாத்தா சொல்வாரு ’’