பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 52 சு. சமுத்திரம் மோகினி அவனுக்குத் தலையாட்டிவிட்டு, கேன்டீன் கட்டிடச் சுவரைத் தற்செயலாகப் பார்த்தாள். அங்கே, சாம்பல் நிறம் பூத்த பெரிய பல்லி ஒன்று, ஒரு கரப்பான் பூச்சியின் பின்பக்கத்தைக் கெளவிக்கொண்டு, அதன் முன் பக்கத்தைச் சுவரில் அடித்தது. பூச்சி தப்பிப்பதற்காகத் துள்ளும் வேகத்தில், பல்லிக்கு அதைக் கொல்லும் வேலை சுலபமாக முடிந்தது. கரப்பான் பூச்சியைப் பல்லி தின்று கொண்டிருந்ததை மோகினி ரசித்துக்கொண்டிருந்தாள். 8 'வாங்கோ, வாங்கோ, நீங்கதானே மிஸ்டர் சங்கர்: வாங்கோ, ஏ. பேபி. யாரு வந்திருக்குன்னு பாரு, இவ்ளவு நேரம்மு தெருவையே பார்த்துப் பாத்து அவள் கண்ணு பூத்து போச்சு...உட்காருங்கோ. பேபி வாம்மா!' மோகினியின் தந்தை ஏகாம்பரம் ஊஞ்சல் பலகையி லிருந்து எழுந்து, சங்கரை இரு கரங்கப்பி வரவேற்றார். அவரால் பேபி" என்றழைக்கப்பட்ட மோகினி உள்ளே யிருந்து வந்தாள். அப்போதுதான் குளித்திருந்தாள். தலை முடியைக் கோதி முடிந்திருந்தாள். வாங்கோ’’ என்று வாயால் கேட்கவில்லையென்றாலும், அவள் தலையாட்டிய விதமும், சிரித்த தோரணையும் அவனைக் குடும்பத்தில் ஒருவனாக அங்கீகரிப்பது போல் தோன்றியது. சங்கர் அவளை மலைப்பாகப் பார்த்தான். அதே சமயம், அந்த வீட்டில் அதிக நேரம் இருக்க விரும்பாதவன்போல், தன் ஜாதகக் குறிப்பை நீட்டினான். ஏகாம்பரம் ஜாதகக் குறிப்பைத் துருவித் துருவிப் பார்த் தார். கால் மணி நேரம் குறிப்பையே பார்த்துக்கொண்டி ருந்துவிட்டு, பேபி, நீ சொன்னது சரிதான்.’’ என்றார்.