பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சு. சமுத்திரம்

  • மிஸ்டர் சங்கர், அப்பாவிடம் வேற எதயாவது கேக்கனுமா? கல்யாணம் காட்சி...'

ஆமாங்க. மறந்தே போய்ட்டேன். நான் லீலாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்! இரண்டு மாதம் வரைக்கும் அதையும் தள்ளிப் போடணுமா?" மோகினி அவனை ஏறிட்டுப் பார்த்தபோது ஏகாம்பரமும் ஜாதகக் குறிப்பிலிருந்து தலையை நிமிர்த்தி விட்டு, அழுத்தந்திருத்தமாகப் பேசினார். 1 .இப்டி கேட்டால் உடனே சொல்ல முடியாது. பொண்ணோட பிறந்த குறிப்பு இல்லன்னாலும் பெரியவ ளான குறிப்பு வேணும். ஒங்ககிட்ட இருக்கா?” சங்கர் மென்று விழுங்கினான். பிறகு, லீலா இப்ப ஊரில் இல்லை. இன்னும் நாலு நாளில வந்துடுவா. கேட்டு வாங்கித்தாரேன்,' என்றான். மோகினி இப்போதும் இடை மறித்தாள். அப்பா, ஒங்களுக்குப் பிறந்த தேதி சொன்னா போதாதா?’’ அவர் போதும்' என்றார். சங்கர், எனக்குத் தெரியாதே' என்றான். உடனே மோகினி உபகாரம் செய்யத் துடித்தவள்போல், லீலாவோட சர்வீஸ் ரிஜிஸ்ட் டரைப் பார்த்தா தெரியுமே" என்றாள். அவள் அவசரம் அவனுக்குத் தெரிய நியாயமில்லை. சங்கர் தந்தையையும், மகளையும் பார்த்தான். அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியின் பின் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு, அவன் முதுகில் கைவிரல்களைப் பட்டும் படாமலும் "தற்செயலாக' வைத்துக்கொண்டு, அவனை இடிக்கக்கூடிய தூரத்தில் நின்றுகொண்டு, கருணை சொட்டப் பார்த்த மோகினியைப் பார்த்ததும், அவனுக்குக்