பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 155 காலமான தன் அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது. அவள் தாய்மையின் உருவமாய், அவனைக் குழந்தையைப் பார்ப்பது போல் பார்த்தாள். முருகா, இந்த பிள்ளைக்கி நல்லவழி காட்டப்பா' என்று தனக்குத்தானே சத்தமாக பேசிக் கொண்ட அந்தக் கிழவர், வெறுங் கிழவராகத் தெரிய வில்லை. சாட்சாத் அவன் தாத்தாவே அங்கே இருந்தது போல் தோன்றியது. நாளைக்கே லீலாவோட பிறந்த தேதிய சொல்விடு நேங்க, பொருத்தம் பார்த்துச் சொல்லணும்' என்றான். நாளைக்கி நான் பிளியாச்சே, டெப்டி செக்ரட்டரி' ரமணனுக்கு பொண்ணு பார்க்கிறாங்க. நான் போகனுமே!’ அப்படியெல்லாம் சொல்லப்படாது. எப்டியாவது: பாத்துடனும்." அப்பா, ஒங்களுக்கு என் காலீக்கை விட ரமணன் உசத்தியாயிட்டானோ?’’ சீறிய மோகினி, சினந் தணிந்தவளாய், சங்கரைப் பார்த்து, நீங்க இவருகிட்ட காட்டாதிங்க ஸ்ார்! இவரு சரியான கிராக்கு. எதையும் மறைத்துப் பேசத் தெரியாது! ஒண்னு கிடக்க ஒண்னு சொல்லிட்டா அப்புறம் லீலா துடிக் கிறத என்னால பார்க்க முடியாது! அப்பா, இவரோட பொருத்தத்தை நீங்க பார்க்கக்கூடாது. ஆமாம், சொல்லிட் டேன்' என்றாள். சங்கர் இப்போது மன்றாடினான். அதெப்டி? ஆனானப்பட்ட துரியோதனனே சகா தேவங்கிட்ட ஜோஸ்யம் கேட்டபோது நான் கேட்கக் கூடாதா?’ ’

  • சும்மாருங்க சங்கர். இவரு எதையாவது உளறி லீலாவை நீங்க கட்டிக்க முடியாம போயிட்டா? லீலா பொறுத்துக்குவாளோ என்னமோ, என்னால முடியாதம்மா நானும் பொண்ணுதான்."