பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 星莎7” சங்கர் மறுநாள் சாயங்காலம் வரவில்லை. காலை யிலேயே வந்தான். லீலாவின் பிறந்த தேதியையும், மாத வருட விவரங்களையும் சொன்னான். மோகினியும் ஜூடை யைத் தோள் வழியாக மார்பில் தொங்கவிட்டுக்கொண்டு அதைப் பின்னிக்கொண்டிருந்தாள். பிறகு ஜல் ஜல் சலங்கை யுடன், சந்தன நிறச் செருப்புடன் அவள் மோகினி மாதிரியே அப்பாவின் அருகிலும், அவன் அருகிலும் மாறி மாறி நின்றுகொண்டும், நகர்ந்துகொண்டும் இருந்தாள். ஏகாம்பரம் சிறிதுநேரம் குறிப்பைப் பார்த்துவிட்டு குடி முழுகிப் போவதுபோல் தலையில் கைவைத்தார். முருகா! அப்பா வாயில நல்ல வாக்கு வரணும்' என்று மோகினி சங்கருக்குக் கேட்கும்படியாகச் சொல்லிக்கொண்டு, கன்னத் தில் போட்டுக்கொண்டாள். சங்கரால் .ெ பா று க் க முடியவில்லை. "சும்மா சொல்லுங்க லார்!" என் வாயால எப்டிங்க சொல்றது?’’ பரவாயில்ல ஸார்! என்னால எதையும் தாங்கிக்க முடியும். ' லீலாவுக்கு களத்திர ஸ்தானம் சரியில்ல." அப்டின்னா?" புருஷனோட வாழ்ற பாக்கியம் இல்லை. அவள் இரண்டாந்தாரமா வாழ்க்கைப்பட்டாதான் புருஷனும் உருப்படுவான். அவளும் உருப்படுவாள் ஏற்கெனவே ஒங்களுக்கு அஷ்டமத்தில சனி.' மோகினி பரபரப்பானாள் துடியாய்த் துடித்துத் தவியாய்த் தவித்தாள்.

என்னப்பா நீங்க, தோஷம் கீஷம் கழிச்சா சரியா பிடாதா ! இது ஒரு பொண்ணோட பிரச்னை, யோசிக்காம. பேசாதிங்க!'