பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் செல்வம் குழைந்தான்: ஒன்மேல எனக்கு இருக்கிற காதல் ஒரு பிரச்சனைக் குரிய விவகாரம் இல்ல! நீ சொல்லிட்டே... நான் சொல்லல! அவ்வளவுதான் விஷயம்; உயிரை அதன் வெளிப்பாடுலதான் பார்க்க முடியும்; தனித்துப் பார்க்க முடியாது. அதுமாதிரி நீ இல்லாமல் என்னைத் தனித்துப் பார்க்கமுடியாது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், உயிரை... அதை விடுறவனால எப்படிப் பார்க்க முடியாதோ...அப்படி என்னை என்னையே பார்க்க முடியாது. தாயில்லாமல் தனித்து ஹாஸ்ட்டல்ல படித்த எனக்கு, தாய் மாதிரி வாஞ்சை காட்டியவள் நீ! ஒன்மேல எனக்குக் காதல் இல்லங்கறது...என்.மேல எனக்கு உயிர் இல்லை என்கிறது மாதிரி. உனக்கோ நான் உறவில் ஒரு கூறு... உனக்கு அப்பா இருக்கார். அண்ணன் இருக் கார். சொந்த பந்தம் இருக்குது. ஆனால் எனக்கு என் உறவின் முழுக் கூறே நீதான். நீ இல்லாமல் ஒருவேளை நான் வாழலாம்! ஆனால் அந்த வாழ்க்கை சுமையாய் இருக்குமே தவிர சுவையாய் இருக்காது பானு'...' செல்வத்தின் குரல் தழுதழுத்தது. அவன் உடம்பெல் லாம் ஆடியது. விழப்போகிறவன்போல் துடித்த அவன் கரங்களை அவள் பிடித்துக்கொண்டாள். கண்ணிர் கரங் களால் அவன் கண்களைத் துடைத்துவிட்டாள். அவ்வப் போது மனதுக்குள் எட்டிப் பார்த்த சந்தேகம் ஒரேயடியாய் தேகத்தை விட்டும், தேகத்துடன் நீக்கமற நிறைந்த மனதை விட்டும் போனது போன்ற திருப்தி: செல்லச் சிணுங்க லோடு-பொய்க் கோபத்தோடு, ஆ ஸ் க ட் டி விரலால், அவன் நெற்றிப்பொட்டை அடித்தபடியே கேட்டாள்.

  • ஒவ்வொருவரும் மனதால் தீர்மானிக்கப்படுறது கிடை யாது. செய்கையால்தான் நிர்ணயிக்கப்படுறாங்க. காதல் பூஜைக்குத் தயாராகும்போது, அதன் மூலவரே கரடியா னால் எப்படி...”*