பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 163 விபசாரத்தைச் செய்றவளை மன்னிச்சிடலாம். ஆனால் ஒன்னப்போல கெளரவத்துக்காக மானத்தை விக்றவளைக் கடவுள் மன்னிக்க மாட்டாருடி... து...' மோகினி கன்னத்தில் விழுந்த லீலாவின் எச்சிலைத் துடைத்துக்கொண்டிருந்தபோது, அவள் வேகமாக வெளி யேறினாள். இதற்குள் பெரிய கூட்டம் கூடிவிட்டது. அனைவருக்கும் லீலாமீது அனுதாபம்தான். அவள் மோகினி மீது துப்பும்போது தாங்களும் பங்கு கொடுக்க நினைத் தார்கள். என்றாலும், வயிற்றுக்குப் போராடும் அவர்கள் அலுவலக அதிகாரிகள் மத்தியில் துப்புக்கெட்டவர்களாக" காட்டிக்கொள்ள விரும்பவில்லை. சிலர் வெளியே ஒடிச் சென்று லீலாவிடம் பிரமாதம்! பிரமாதம்! இப்படித்தான் பண்ணனும்' என்றார்கள். எதிரே சங்கர் அவளுக்கு வழி விடுவதுபோல் ஒதுங்கிக் கொண்டான். லீலா அந்த எறும்பு மனிதர்களைப் பார்த்துக் கொண்டே, தலைவிரி கோலமாகப் போய்விட்டாள். மூன்று நாளில் லீலாவின் ராஜினாமா தபாலில் வந்தது. ஒரு மாதத்தில் மோகினி பப்ளிவிட்டி எக்ஸிகியூட்டிவ் ஆகிவிட்டாள். நடந்துபோன மாச்சரியங்களை நினைத்து சற்று தயங்கிய ஜெனரல் மானேஜர், மோகினி "நியாய'த்தில் தன் படத்தை நியாயமான அளவுச்கு மேலேயே அட்டையில் போட்டு, புன்னகை சிந்தும் எங்கள் தலைவர்" என்று தலைப்பும் போட்டதில், சரியாகிவிட்டார். அவர் மடமடவென்று எழுதிய கடிதத்தாலும் டிரங்க்கால் களாலும், டெலெக்ஸ் செய்தியாலும், மோகினிக்கு லீலாவின் வேலை கிடைத்துவிட்டது. சங்கர் புதிய மோகினியின் ஆதரவில் பழைய லீலாவின் பிரிவுத் துயரைத் தாங்கிக்கொண்டான். ஆனால் நிரந்தர மான வேலை கிடைத்ததும். அவள் பழைய மோகினியா னாள். அவனை உதாசீனப்படுத்தினாள். பப்ளிவிட்டி