பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.4 சு. சமுத்திரம் மானேஜரிடம் திட்டுக்கள் வாங்கிக் கொடுத்தாள். போதாக் குறைக்குப் பியூன்களும், மோகினி விரோதிகளான இதர பெண்களும் லீலாவின் வாழ்க்கையைக் கெடுத்திட்டிங் களே " - ன்று அவனைக் குற்றஞ்சாட்டினார்கள். அத்தான், நீங்கள் செய்தது நியாயமா? சொல்லுங்கள் அத்தான் சொல்லுங்கள்' என்று லீலா தன்னிடம் கண்ணிர் விட்டுக் கதறுவாள் என்று எதிர்பார்த்த சங்கருக்கு, அவள் அப்படி வாதாடாதது மட்டுமில்லாமல், ஆளே அகப்படாத தால் பெரிய அதிர்ச்சி, ச ங் க ர் கிட்டத்தட்டப் பைத்தியமாகிவிட்டான். நாற்காலியில் கண்ணிமைகளை இமைக்காமலே கால்மணி நேரம் உட்கார்ந்திருப்பான். பிறகு கண்களை மூடிக்கொண்டு இருப்பான். தானாகச் சிரிப்பான். தனக்குள்ளே திட்டிக் கொள்வான். அவசரமாக வருகின்ற டெலெக்ஸ் மெஸ்ே ஜுகளை" அப்படியே வைத் திருப்பான். மானேஜரும் அவனைத் திட்டுவதில்லை. உறைக்காதவனைத் திட்டித் தான் என்ன பிரயோசனம்? விவகாரம், ஜெனரல் மானேஜர் வரைக்கும் போனது. ஒரு காலத்தில் சுறுசுறுப்பாக விளங்கிய அந்த இளைஞன், வெட்டப்போகிற கிடாமாதிரி, பரக்கப் பரக்க விழித்துக் கொண்டு பித்துப் பிடித்தவனாய் மாறியிருந்ததால் அவன் மீது நடவடிக்கை எடுக்க ஜி. எம். முக்கு விருப்பமில்லைதான். ஆனால் போங்க ஸார், ரெண்டுபேரு செய்யுற வேலையை நான் எப்படி செய்யுறதாம்’ என்று மோகினி தன்னிடம் பரிதாபமாக கெஞ்சுவதையும் அவரால் மிஞ்ச முடியவில்லை. ச. சங்கர் நடிக்கிறான் ஸ்ார்! சாப்பிடத் தெரியுது. டிரஸ் பண்ணத் தெரியுது. வேல மட்டும் பார்க்க தெரியாதாக்கும். யாருக்கு பிராப்ளம் இல்லை? ஒங்களுக்கில்லையா? எனக் கில்லையா?’ என்று அவள் சொன்னபோது அவர் யோசித் தார். இந்த போட்டோ பிளாக் சரியில்லே,’’ என்று