பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 சு. சமுத்திரம் நடுங்கிய கைகளோடு அவள் டெலிபோனை எடுத்த போது, அளிஸ்டண்ட் பப்ளிஸிட்டி மானேஜர் வேலை இனி உனக்குக் கிடைச்சிடும் போலிருக்கே!' என்று ஏகாம்பரம் சந்தோஷமாகக் கத்தினார். 9 காலம் இருபதாண்டுகளைக் கழித்தது. அந்த இடை வெளி பாதிக்கப்பட்டவர்களுக்கு இருபது யுகங்களாகவும், பாதிப்பு கொடுத்தவளுக்கு இருபது நிமிடங்களாகவும் கழிந்தது. காலவீச்சும், மோகினி வீச்சும் கூட்டாக சேர்ந்து, பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரத்தையும், பழைய ஜெனரல் மானேஜரையும் குப்பைகளைத் தள்ளுவது மாதிரி தள்ளி விட்டது. இன்றைய பப்ளிளிட்டி மானேஜர் மோகினி, ஏர் கன்டிஷன் அறைக்குள் என்ன செய்யலாம் என்று யோசித் துக்கொண்டிருந்தாள். எதிரிகளே இல்லாததால் அவளுக்கு கடந்த ஒராண்டு காலமாக போரடித்துக் கொண்டிருந்தது. எதிர்ப்பாளர்கள் எதிரிகளாக முடியாது. வலுவான நிலையில் இருந்த அவளை யாரும் பகைத்துக்கொள்ளவில்லை. அதோடு, அவள் தயவில் வேலைக்குச் சேர்ந்த ஜால்ராக்களை ஒற்றர்களாக வைத்து, எதிர்ப்புச் சக்திகளை வேவு பார்த்து வருகிறாள். அவர்கள் எதிரிகளே இல்லை" என்று சொன்னபோது, இவள் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டிருந்தாள். பியூன் கொடுத்துவிட்டுப் போன காகிதத்தைப் பார்த் தாள். வனிதா பார்க்க வந்திருக்கிறாளாம். ஏண்டி, என்னைப் பார்த்ததும், விருவிருட்டுன்னு ஹேன்ட்பாக்கை