பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் I 69 ஒங்களத்தான் ம ைல போ ல் நம்புறேன். உங்களுக்கு என்னைப்பத்தி தெரியும். நான் அப்டிப்பட்டவளா? என்னை வேண்டாமுன்னு சொன்னா கூட பரவாயில்ல. என் கேரக்டர பத்தி சொன்னா... என்ன மாதிரி அர்த்தம்? ஒங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கு." ராஜன் என்ன சொல்றான்? நல்ல பையனாச்சே! நம்பிக்கை துரோகம் பண்ணமாட்டானே!" அவரு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொல்றார். நான்தான் பொறுக்கும்படி சொல்லியிருக்கேன். அவங்க மாமி மனசு மாறும் வரைக்கும் காத்திருக்கலாமுன்னு சொல்லியிருக்கேன்! நான் ஒங்களத்தான் மாமி நம்பி யிருக்கேன்!" டோண்ட் ஒர்ரி, நீ என்னை நெக்ஸ்ட் வீக்ல வந்து பாரு,’’ வனிதா போய்விட்டாள். மோகினி போனை எடுத்தாள். ஹலோ... மிஸ்டர் வில்லியம்ஸ்? குட் மார்னிங். என்ன? குரல் கரகரப்பா இருக்கா? ஆமாம். இப்ப ஒங்களுக்கு அப்டித் தான் தெரியும். நோ, நோ. சும்மா ஜோக்குக்குச் சொன்னேன். அதிருக்கட்டும். நம்ம ராஜன் வனிதாவை ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கப்போறானாமே ஹா... ஹா, ஹோ ஹோ ஹோ! நீங்க ஒங்க பையன் தலையில் தட்டி வைங்க. அந்தப் பெண் ரொம்ப மோசம். ராஜன் அவளுக்கு நாலாவது கை. ஆமாம். அதான், அதான். அப்புறம் ஒரு விஷயம். எங்க கலா எம். ஏ படிக்க மாட்டேங் கறா... அது என்னவோ தெரியல. நீங்க சொல்லிப் பாருங்க. நான் சொல்லிப் பார்த்துட்டேன். ஏதாவது பதில் பேசினாத் தானே? என் முகத்தப் பார்த்தே பேசமாட்டேங்கறா. எனக்கே புரியமாட்டேங்குது. நான், அவள்மேல உயிரயே வைச்சிருக்கேன். ஒங்களுக்கே தெரியும். அவளைப் புரிஞ் சிக்கவே முடியல! வச்சிடட்டுமா? அந்த வனிதா விஷயம்... அதை வளர விடாதீங்க...'