பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 171 மறுநாள் மோகினி அளிஸ்டெண்ட் பப்ளிஸிட்டி ஆபீசராகவும் ஆனாள். சுந்தரத்திற்கு எதிரியாகவும் மாறினாள். புதிய பொறுப்பில் சேர்ந்த ஆறு மாதத்தில், ஒரு பியூனை எதற்கோ விரட்டினாள். அவன் மதுரைக்கு டிரான்ஸ்பர் கேட்டுக் கிடைக்காமல் போன சமயம். சண்டை போட்டால்தான் டிரான்ஸ்பர் வரும் என்பதை உணர்ந்: திருந்த அவன், என்னம்மா குதிக்கிற, ஒன் வண்ட வாளத்தை தண்டவாளத்துல விடணுமா?’ என்றான். உடனே மோகினி கத்த, பியூன் திருப்பிக் கத்த சத்தங் கேட்டு உள்ளேயிருந்த சுந்தரம் வெளியே வரும்போது, காரியத்துக்காகச் சண்டைபோட நினைத்த பியூன் இப்போது சண்டையை மட்டுமே ஒரு காரியமாக நினைத்துக்கொண்டு, கிட்டத்தட்ட அவளை அடிக்கப் போய்விட்டான். அவன் அஞ்சாதவன். யூனியன் லீடர். ஆண்களை அடித்துப் பழகி யவன். என்னதான் தனக்கு வேண்டாதவளாக இருந்தா லும், ஒரு ஆபீஸர் அதுவும் பெண் ஆபீஸர், பியூனிடம் அடி படக்கூடாது என்று நினைத்த சுந்தரம், அவனுக்கு சரிசமமா நீ பேசலாமா?' என்று சொல்லிவிட்டு, பழைய சகவாசதோஷத்தில் அவள் கையைப் பிடித்து, கொஞ்சம்கொஞ்சம்தான் தள்ளினார். மோகினிக்கு ஏற்கெனவே ஒரு சந்தேகம்-அவர் சொல்லித்தான் பியூன் சண்டைக்கு. வருகிறான் என்று ஆகையால் கத்தினாள் பயங்கரமாகக் கத்தினாள். அய்யய்யோ! இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா? இவர் எப்படி என்னைத் தொடலாம்? பொண்ணுன்னா ஒங்களுக்கு இளக்காரமா? நான் என்ன ஒங்க பொண்டாட்டியா? ஒரு பொண்ணு வயித்துப் பொழப் பிற்காக வேலைக்கு வந்தால் அவளை என்ன வேணு. மின்னாலும் பண்ணிடலாமுன்னு நினைச்சிட்டீங்களே, எதுக்குய்யா என்னைத் தொட்டே? அப்பா கூட என்னைத் தொடமாட்டார். நீ எப்டிய்யா தொடலாம்? கேக்க ஆளில்லங்றை தைரியந்தானே. யாருமே இல்லாத அனாதைங்