பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சு. சமுத்திரம் கறதுக்காக கையைப் பிடிச்சி இழுக்கிறதா, ஒன்கிட்ட எப்டிய்யா நான் தனியா வேலை பார்க்க முடியும்? இதக் கேக்க யாருமே இல்லியா?” ஏனில்லை?" என்று சொல்லிக் கொண்டே ஜி. எம். வந்து சேர்ந்தார். பப்ளிஸிட்டி சுந்தரத்திற்குக் கைகால் மட்டுமல்ல, வாயும் ஒடவில்லை. போதாக்குறைக்குக் கூட்டம் வேறு. எல்லோருக்கும் அவர்கள் முன்னாள் உறவுகள் தெரியும். ஆனால் யாரும் வாய் திறக்கவில்லை. பியூன் கூட ரெண்டு பேரில் யார் ஒழிந்தாலும் சரிதான் என்று நினைத்து வாளா விருந்தான். மோகினி, தன்னை பியூனின் உதவியோடு சுந்தரம் பலவந்தமாகக் கெடுக்கப் பார்த்தார் என்று புகார் கொடுத் தாள். அவள் எனக்கே சொந்தம்' என்று நினைத்த ஜி. எம். அவள் புகாரை பார்வர்ட் செய்தார். பப்ளிஸிட்டி சுந்தரத்தின் உத்தியோகப் பல்லைப் பிடுங்க வேண்டும் என்றும், இல்லையானால் அவர் தன்னோடு வேலை பார்க்கும் மோகினியை எந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்வார் என்று சொல்ல முடியாது என்றும், ஒரு கடிதத்தைப் புகாரோடு இணைத்தார். மோகினி தனக்கு நேர்ந்த அவமானத்தைச் சொல்விச் சொல்லி அழுதுகொண்டிருந்தாள். அவள் மட்டுமா? பப்ளிஸிட்டி சுந்தரமும் அழுதார். சஸ்பென்ஷனை எண்ணி அழுதார். ஒரு ராட்சசியை உருவாக்கி, தானும் ஒரு ராட்சசனாக மாறிவிட்டதற்காக அழுதார். பிறகு ஒரு புழுவாய்ப் போனதற்காக அழுதார். சங்கருக்கும் ச்ேர்த்து அழுதார். பின்னர் அஸிஸ்டெண்ட் மானேஜராக சரிவர்ட்” செய்யப்பட்டு பம்பாய்க்குப் போனதற்காக அழுதார்.