பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 173: அவர் அழட்டும். ஜெனரல் மானேஜராவது அழாமல் இருந்திருக்கலாம். அதுதான் இல்லை. சுந்தரம் போனதும் மோகினியை ஏகபோக உரிமை யோடு நினைத்த அவர், மோகினிக்குப் பல சலுகைகள் வழங்கினார். அவளுக்குத் துணி துவைத்துப் போட்ட பெண் களும், லாண்டிரித் துணியை வாங்கிக்கொண்டு வருபவர் களும் முறையே பியூன்களாகவும் கிளார்க்குகளாகவும் மாறி னார்கள். அவளுடைய உயிர் நண்பர்கள், அந்தக் கம்பெனி கடனுக்குக் கொடுத்த யந்திரங்களால், தொழிலதிபர்களாகக் கூட மாறினார்கள். ஒரு நாள்வேர்க்க விறுவிறுக்க ஜி. எம். மின் அறைக்குள் நுழைந்த மோகினி, அப்பாப்பா...என்ன வெயில்! பஸ்ஸைப் பிடிச்சு வருமுன்ன போதும் போதுமுன்னு ஆயிட்டுது," என்றாள் ஜாக்கெட் துணிக்குள் ஊதிக்கொண்டே. ஜி. எம். மனசு இளகிய மனசு, டாக்சில வர்ரதுதானே.” எப்டி ஸார் முடியும். நீங்க வந்தா கம்பனி பணம் கொடுக்கும். நான் வந்தால் நானுல்ல கொடுக்கணும்.' • நான் சொந்தக் கார்லயே வந்துடுறேன் ஆபீஸ் கார் ரிப்பேர். ஒரு மாதம் வரைக்கும் டாக்சில வா. நான் வந்ததா வவுச்சர் போட்டுக்கலாம். எதுக்காக நீ பாவம் இப்டி கஷ்டப்படனும்.' மோகினி கஷ்டப்படவில்லை. தினம் டாக்சியில் வந்து வவுச்சர் கொடுத்தாள். மானேஜர் தான் வந்ததாகக் கை யெழுத்துப் போட்டார். ஸ்கூட்டர் நம்பரையும், போலிஸ் வேன் நம்பரையும் டாக்ஸி நம்பர்களாக வவுச்சரில் காட்டி விட்டு, அந்த நம்பர்களையும் தேதிகளையும் தன் டயரியில் குறித்துக்கொண்டு, அப்படிக் குறித்துக்கொள்ளும்போது, ஒரு கிராமியப் பாடலைப் பாடிக்கொள்வாள் மோகினி.