பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 74 சு. சமுத்திரம் துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டிஎன் கிட்ட இருக்குது சூரிக்கத்தி." ஜி.எம். முக்கு அவள்மீது கொஞ்சம் அலுப்புத் தட்டியது. பல பெரிய இடத்து நண்பர்கள் அவளை அவர் பப்ளிக்காக ப்ே பண்ணுவதைக் கண்டித்தார்கள். கல்யாணமான மகள் கள் ஏறக்குறைய அடிக்கிற அளவுக்குப் போய்விட்டார்கள், மனைவிக்காரி ஒருநாள் அலுவலகத்தில் வந்து அவரும் மோகினியும் பேசிக்கொண்டிருக்கும்போது, குறுக்கிட்டுத் திட்டினாள். ஆகையால் ஜி. எம். ஜாக்கிரதையாக காதல் செய்ய நினைத்தார். அதற்காக, பிறர் அவரை யோக்கியன் என்று சொல்ல வேண்டும் என்பதற்காக, சில சமயம் கடுமை யாகப் பேசிவிட்டு, மோகினியைப் பார்த்து, தனிமையில் சிரித்துக்கொள்வார். முட்டாள்கள்! நான் ஒன்னைத் திட்டுறதா நிஜமாவே நினைக்கிறாங்க" என்று அவர் சிரிக்கும்போது, மோகினியும் அந்த முட்டாளை நினைத்துச் சிரித்துக்கொள்வாள். என்றாலும், அவளுக்குப் பல இடங்களிலிருந்து டெலி போன் கால்கள் வருவதும், அவரே ஆபரேட்டராக" செயல் பட வேண்டியிருப்பதும் அவருக்குப் பிடிக்கவில்லை. மோகினி யிடம் கொஞ்சம் வாலாட்டினார். அப்போது கம்பெனியின் யந்திரம் ஒன்றைக் கடனுக்கு வாங்கி, சக்கைபோடு போட்ட மோ இனியின் தோழர் ஒருவர் . தவனைக் கடனை அடைக் காமல் போக்கு’க் காட்டிக்கொண்டிருந்தார். ஆத்திரப் பட்ட ஜி. எம். மோகினி சொல்லியும் கேளாமல் கோர்ட் மூலம் சம்பந்தப்பட்ட யந்திரத்தை அட்டாச் செய்தார். நீங்க கடனடைக்க வேண்டாம். நான் ரைட் ஆப் வாங்கித் தறேன், என்று அவர்களுக்கு வாக்குக் கொடுத்திருந்த மோகினி, தான் சொல்லிக் கேளாத ஜி. எம்மை கிர்தா சிங்கைக் கொண்டு கேட்க வைத்தாள். ஆம். டாக்ஸி நம்பர்கள், மொட்டைப் பெட்டிஷன் களாக கிர்தாசிங்கிற்கு ஓடின. விவகாரம் பெரிதாகியது.