பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 1 75 ஜெனரல் மானேஜர், பப்ளிஸிட்டி மானேஜராக பரிவர்ட்” செய்யப்பட்டு, கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டார். இதற்கு மேல் விவகாரம் பெரிதாகாமல் போனதற்குக் காரணம், மோகினி அதற்குமேல் அதைப் பெரிதாக்க விரும்பவில்லை. ஒருவேளை அவளும் மாட்டிக்கொண்டால்! அப்புறம், ராமசாமி என்ற பெயர் கொண்ட ஒருவர் ஜெனரல் மானேஜராக வந்தார். ஆசாமி நேர்மையானவர். ஒழுக்கசீலர். ஆனால் சமூக பிரக்ஞை இல்லாமல் குடும்ப பிரக்ஞையை மட்டுமே குறியாகக் கொண்டவர். இதனால் பயந் தாங்கொள்ளியானவர். அவரின் நேர்மையில் மகிழ்ந்து போன ஊழியர்கள், மோகினி மோசமானவள் பலருக்கு உலை வைத்தவள்’ என்று வரலாற்று ஆதாரங்களோடு சொன்னபோது, அவர்கள் நினைத்ததுபோலவே அவரும் சிவ சிவ' என்று சொல்லி முகத்தைச் சுழித்தார். அவர்கள் அவரை உஷாராக இருக்கச் சொன்னார்கள். இருந்தார். மோகினி அவர் அறைக்குள் வந்தவுடனேயே, அந்த மேலதிகாரி எழுந்து நிற்பார். அவள் நீட்டிய இடத்திலெல் லாம் கையெழுத்துப் போட்டார். ஒரு சமயம் மட்டும் மறுத்துவிட்டார். அதற்காக, அவரை கிர்தாசிங்கிடம் சொல்லிக் கிளப்பலாமா என்று மோகினி யோசித்துக்கொண் டிருத்தபோது, அவளுடைய பாலிடிக்ஸ் பிடிக்காமல் ராமசாமி டில்லிக்கே உத்தியோகத்தை மாற்றிக்கொண்டு ஒடிவிட்டார். இப்போது வந் திருக்கும் ஜெனரல் மானேஜர் ஆதிமூலம் சாது. பிறர் மனம் நோகப் பேசி அறியாதவர். நீங்க செய்தது தப்பு' என்பதற்குப் பதிலாக, நீங்க செய்தது கம்ப்ளிட்டா சரின்னு எனக்குத் தோணல’ என்று தோன்று வதை நாகரீகமாகச் சொல்வார் அவர். ஆனால் நோயாளி. பிறர் தவறு செய்தால், தன்னை வருத்திக்கொள்ளும் தியாகி,