பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 179 மோகினி குழம்பிப் போனாள். போதாக்குறைக்கு, உடம்பெல்லாம் நமைச்சல், சொறிகிற இடத்தில் செதில் செதிலான கறுப்புப் படைகள் டாக்டரிடம் காட்ட வேண்டும். எங்கே காட்ட முடிகிறது. மகளைப்பற்றிய கவலையிலேயே உடம்பைப் பற்றின கவலை மறந்து விடுகிறதே! மோகினியின் சிந்தனையோட்டத்தை, மேற்கொண்டு தடுக்கும்வகையில் டெலிபோன் மணி அடித்தது. டில்லியில் இருந்து ஒருவர்-பெரிய ஆபீஸர்-எஸ். டி. டியில் பேசினார். அவள் மகள், கலாவுக்கு அவள் கார்ப்பரேஷனிலேயே பப்ளிவிட்டி எக்ஸிகியூட்டிவாக வேலை கிடைத்திருக்கிற தாம். மோகினி எப்பொழுதோ சொல்லி வைத்திருந்தது இப்போது நடந்துள்ளது. ஆர்டர் வரப்போகிறதாம்: அப்ளிகேஷனை ஆர்டர் வந்தவுடனேயே முன் தேதி போட்டு அனுப்பிடணுமாம். மோகினிக்கு கொஞ்சம் தெம்பு பிறந்தது. வேலையில் சேர்ந்துவிட்டால் மகள் மனதில் மாறுதல் ஏற்படும். அதோடு மகளோடு பழகுவதற்கு நிறைய சந்தர்ப்பம் வரும். புரிந்துகொள்வாள். எல்லாம் புதிய டைரக்டரின் அருள். எப்படியும், அஸிஸ்டெண்ட் பப்ளிஸிட்டி ஆபீஸராக இருக்கும் இந்த ரகுமணியை காலி செய்துவிட வேண்டும். இவனும் இவன் கிருதாவும் இவன் இடத்தில் கலாவை வைக்க வேண்டும். அப்புறம் நாமே ராஜினாமா செய்து விட்டு அந்த பிளேஸில் மகளை அமர்த்த வேண்டும். முடியுமா? ஏன் முடியாது? கலா வேலையில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே புத் தி" யைக் காட்டிவிட்டாள் மகள் வேலையில் சீக்கிரம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற ஆசையில், கலா டெலக்ஸ் மெஸேஜ்