பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏&Q க. சமுத்திரம் களை எடிட் பண்ணிட்டியா? சீக்கிரம் கொண்டு வா... என்று உள்ளே ஏர்கண்டிஷன் அறையில் இருந்து குரல் கொடுத்தாள். அப்படிக் குரல் கொடுத்ததற்கு. மகள் இந்த சல்ட்ரி சம்மரில் வேர்த்துக் கொட்டிக் கொண்டிருக்காமல், தனது குளுகுளு' அறைக்குள் வந்து இருக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம். மோகினி எதிர்பார்த்ததுபோல் நடக்கவில்லை. கலா வெளியே இருந்துகொண்டே குரல் கொடுத்தாள். ஏஎம் டேபிள்ல வச்சிருக்கேன், மிஸ்டர் ரகுமணி ஆபீஸ் விஷயமா வெளிய போயிருக்கார். அவர் செக்பண்ணி அனுப்புவார்." எனக்குத் தெரியும். நான் சொல்றேன். எடுத்துக்கிட்டு сит..."" -ஐ அம் ஸாரி மேடம்! எதுவுமே பிராப்பர் சேனல்ல. வரணும்!" மோகினி துடித்துப்போனாள், மகள் வராமல் போனதற். காக அல்ல. மேடமாமே! ஆபீஸர் என்கிற அந்தஸ்துக்காக அப்படிக் கூப்பிடுறாளா அல்லது அந்தஸ்தில்லாத அம்மா என்கிறதுக்காக அப்படிக் கூப்பிடுகிறாளா? சிறிது பொருமிய மோகினி, பெற்ற மகள் வெயிலின் பிடிமானத்திலும் தான் மட்டும் ஏர்கண்டிஷன் அறையிலும் இருக்க மனமில்லாமல், ஏதோ ஒரு"சாக்கில் டெ லிபிரிண்டர் பக்கம் வந்து நின்றுகொண்டாள். இன்னொரு நாள். கலா கொஞ்சம் தாமதமாக வந்தாள். அம்மாவின் காரில் அவள் வருவதில்லை. ஒருமுறை தாய்க்காரி காரில் ஏறும்படி சொன்னதுக்கு. நீ எங்கெல்லாமோ சுத் திட்டு: வருவே. நம்மளால முடியாது" என்று முகத்தில் அடிக்காமல் அடித்தாள்.