பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 சு. சமுத்திரம் கலா ரகுமணியின் அருகே நின்றுகொண்டு, நானும் லேட்டா வந்தேன். ஏஎம் வந்த பிறகுதான் வந்தேன். எனக்கும் மெமோ கொடுங்க” என்றாள். மோகினிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஒனக்காகத் தானடி அவருக்கு மெமோ கொடுக்கிறேன்" என்று சொல்ல முடியவில்லை. ஐ nே...யூ போத் கெட் அவுட்!" என்று கத்தினாள். இருவரும் ஜோடியாக வெளி யேறியதைப் பார்த்து, அவள் வயிறு எரிந்தது. மேற் கொண்டும் ஏதாவது கத்தியிருப்பாள். அதற்குள் வாயில் நமைச்சல். கீழுதட்டில் கன்னங் கரேர் என்றிருந்த படை யில் வலி. மாலையில் அலுவலகத்தை விட்டு மோகினி வெளியே வந்தபோது, ரகுமணியும் கலாவும் பஸ் நிலையத்தில் நின்றி ருந்தார்கள். காரை அங்கே நிறுத்தி, மனங் கேட்காமல் * ஏறிக்கோ’ என்று சொன்னபோது, கலா நோ, தேங்ஸ்... கொஞ்சம் வேல இருக்கு" என்றாள். என்ன வேலை... அதுவும் ஒரு ஸோஷியல் ஸ்டேட்டஸ் இல்லாத இந்த ரகுமணிப் பயலோட...? மாலையில் கறுவிக்கொண்டே போன மோகினி மறுநாள் செருமிக்கொண்டே தன் அறைக்குள் போனாள். வில்லி யம்ஸின் மகன் ராஜனைக் காதலிக்கும் வனிதா எதையோ பேசுகிறாள்... ரகுமணியும் கலாவும் அவளுக்கு அனுதாபத் தோடு காதுகளை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வனிதா சுதாரித்துக்கொண்டு மோகினி கூப்பிடு முன் னாலே அவள் அறைக்குள் போனாள். மேடம்...' என்று அவள் பேசுவதற்கு முன்னதாகவே, ஐ அம் ஸாரி வனிதா ! மிஸ்டர் வில்லியம்ஸ் முடியாதுன்னுட்டார். ராஜனுக்கு வேற இடத்துல பெண் பார்த்தாச்சாம். ஐ அம்... ஸாரி... நீயும் அவன் ஐ. ஏ. எஸ். என்பதற்காக நச்சரிக்கப்படாது. விரலுக்குத்தக்க வீக்கம் வேணும். ஒகே. ஐ அம் பிஸி...' என்றாள்.