பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 183 வனிதா மோகினியைச் சிறிது நேரம் வெறித்துப் பார்த் தாள். அந்த கண்களின் உஷ்ணம், மேட"த்தைச் சுட்டெரித் திருக்க வேண்டும், தலைகுனிந்து கொண்டாள், வனிதா வெளியேறிவிட்டாள் என்பதைக் காலடிச் சத்தத்தால் உணர்ந்துகொண்ட மோகினி, போலீஸ் அதிகாரியான வில்லியம்ஸுக்கு டெலிபோன் செய்து, வனிதாவைப்பற்றி மீண்டும் இல்லாததும், பொல்லாததுமாக வத்தி வைத்த போது கலா உள்ளே வந்தாள். அவள் டெலிபோன் உரை யாடலைக் கூர்ந்து கேட்டாள். மோகினி பரிபாஷையில் பேசி டெலிபோனை வைத்தபோது, யாருக்கும் மா... டெலிபோன் பண்ணினே... அங்கிள் வில்லியம்ஸ்ஸிற்கா?’’ என்றாள். மோகினி புளகாங்கிதம் அடைந்தாள். இடையில், அம்மா என்று சொல்லிவிட்டாளே மகள்! இன்னொரு தடவை அப்படி அழைக்கவேண்டும் போலிருந்தது: கலாவும் குழைந்து பேசினாள். அங்கிள் மகன் ராஜா... நேத்து பார்த்தேன். சப்கலெக்டராக இருக்கானாம்! நல்ல அழகா இருக்கான்..." அதுமட்டுமில்லடி நீன்னா அவனுக்கு உயிரு... * அப்படியா... குட் நியூஸ்! அம்மா, நான் அங்கிள் வில்லியம்ஸிற்கு போன் பண்ணட்டுமா?"

  • நீ திருந்திடுவேன்னு எனக்குத் தெரியும்." மோகினி டெலிபோனைச் சுழற்றப் போனாள். அதற்குள் இரண்டு புறங்கைகளிலும் நமைச்சல்,

கலா அம்மாவைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டே டயலைச் சுழற்றினாள். ! அங்கிளா... நான் கலா பேசுறேன்... யூ ஆர் கரெக்ட்! காரணத்தோடுதான் டெலிப்ோன் செய்கிறேன்... மம்மி வனிதாவைப்பற்றி சொன்னது சுத்தப் பேத்தல்: வனிதா