பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 6 சு. சமுத்திரம் கூப்பிட்டு, ஒரு கான்பிடன்ஷியல் கடிதத்தை டிக்டெட் செய்தாள். பிறகு ஸ்டெனோவிடம் டில்லிக்கு ஒரு பிளேன் டிக்கட் ரிசர்வ் செய்யச் சொன்னாள். பத்து பதினைந்து நாட்கள் ஓடின. ரகுமணி ஒரு கற்றை பேப்பர்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டு, க ன் ன த் தி ல் கை வைத்தவாறு இருந்தான். மோகினி டில்லிக்குப் போயிருப்பதால் இந்த மாதிரி விவரத்தை அவன் எதிர்பார்த்ததுதான். இருந் தாலும் அவன்மீது சார்ஜ் ஷிட்" வந்ததும் அவன் கலங்கிப் போனான். "ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க' என்று கேட்டுக்கொண்டே கலா வந்தாள். அவன் கையில் இருந்த கடிதக் கற்றைகளைப் பிடுங்கிப் படித்தாள். அட கடவுளே. என்குயரி நடக்கப் போவுதா?” என்னை, டிஸ்மிஸ் பண்ணணுமுன்னு முன்னால தீர்மானிச்சு, பின்னால என்குயரி போட்டிருக்கிறாங்க. உங்கம்மா லேசுப்பட்டவங்களா... டோண்ட் ஒர்ரி ரகு...எங்கம்மாவுக்குப் பட்டாத்தான் தெரியும். அந்த லெவலுக்குப் போகவேண்டாமுன்னு: நினைச்சேன், முடியாது போலிருக்கு..."

  • எந்த லெவலுக்கு?"

அது இப்போ உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லசு உங்க உத்தியோகம் போகாது. அதுக்கு நானிருக்கேன்!'" -ஐ ம் ஸாரி கலா. அம்மாவா நானா என்கிற நிலைமை ஒனக்கு வந்திருக்க வேண்டாம். நோ நோ. அம்மாவா நீங்களா என்கிற நிலைமையா இருந்தால் நான் அம்மா கட்சிதான். பெத்தவள விட நீங்க பெரிசில்ல. ஆனால் இது அப்படி அல்ல. அதர்மமா தர்மமா என்ற நிலைமை. நான் தர்மத்தின் கட்சி. ஆல் ரைட். கடவுள் விட்ட வழி.