பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 187 ரகுமணி அவனை ஆச்சரியத்தோடு பார்த்தான். அந்த முகத்தைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆறுதலாக இருந் தாலும், டிஸ்மிஸ்" பயத்தை அடியோடு டிஸ்மிஸ் செய்ய முடியவில்லை. டில்லியில் இருந்து மோகினி திரும்பிவிட்டாள். இன்னும் ஒரு மாதத்திற்குள் என்குயரி, கண் துடைப்புக்கள் முடிந்து விடும். ரகுமணி டிஸ்மிஸ் ஆவான். கலாவும், அவனை மறந்துவிடுவாள். அல்லது மறக்க வைக்க வேண்டும். வீட்டில் மகளை நேருக்கு நேர் பார்க்கக் கூச்சப்பட்ட மோகினி, அவளைப் பார்க்காமலே அலுவலகம் வந்தாள். தான் இல்லாத இந்த எட்டு நாளில், மகளுக்கும் ரகு மணிக்கும் ஏதாவது ஏடாகூடமாய் நடந்திருக்குமோ என்று கூடப் பதறினாள் வாதத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்த ஏகாம்பரத்திடம் ஜாடையாகப் பேசிப் பார்த்தாள் ரகுமணி வந்தானா என்று அவர் இல்லை என்று தலை யாட்டியதும், நிம்மதி, பரம நிம்மதி. 11 மோகினி சரியாகப் பத்து மணிக்கு அலுவலகம் வந்தாள். ரகுமணியைக் காணவில்லை. உடனே ஸ்டெனோ விடம் ஒரு மெமோ அடிக்கச் சொல்லிவிட்டு, ஸ்டெனோக் காரி ஏதோ பேச வந்ததைப் பொருட்படுத்தாமல் தன் அறைக்குள் போனாள். அங்கே ஆஜானுபாகுவான ஒரு மீசைக்காரர் உட்கார்ந் திருப்பது. அதுவும் தன்னைப் பார்த்த பிறகும் எழுந்திருக் காமல் இருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை.