பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 8 சு. சமுத்திரம் சமிஸ்டர், நீங்க வெளிலேயே உட்கார்ந்திருக்கலாம்." வந்தவர் அசரவில்லை, என்ன பண்றது. உள்ள இருக்கறவங்கள வெளில நிறுத்துறதுக்காக நான் சமயத்துக்குத் தக்கபடி எங்க உட்காரனுமோ அங்க உட்காரணும். அது என்னோட கடமை. அதுக்காக சம்பளம் வேற கொடுக்கிறாங்க. நீங்க தானே மிஸ் மோகினி? ஒங்களுக்கு கலான்னு ஒரு பொண் இருக்குல்ல...' மோகினி அவரை ஏற இறங்கப் பார்த்தாள். அவர் அவளை உற்றுப் பார்த்தார். பிறகு மடமடவென்று பேசினார். மிஸ் மோகினி. நான் சிபிஐ இன்ஸ்பெக்டர். ஒங்க கார்ப்பரேஷன் நடத்துற நியாயம்’ பத்திரிகை பிரிண்டர் கிட்ட நீங்க செகரட்டரியா இருக்கிற சபாவுக்கு பிளாக்குங்க செய்திருக்கீங்க. சாவணிர் அச்சடித் திருக்கீங்க, சபாகிட்ட இருந்து பணம் வாங்கியிருக்கீங்க, ஆனால் பிரிண்டர்கிட்ட கொடுக்கல. அதோட பிரிண்டர் கணக்குல சாவணிரை பிரிண்ட் செய்றதாவோ பிளாக் செய்ததாவோ பேக்டரில விவரம் இல்ல. இது பத்து வருஷமா நடக்குது. பிரிண்டருக் கும் பத்து வருஷமா காண்ட்ராக்ட் கிடச்சிக்கிட்டு வருது. இரண்டாவது, குரோம்பேட்டையில அப்பா பேருக்கு ஒரு வீடு கட்டியிருக்கீங்க. அண்ணாநகர் ல அம்மா பேருக்கு ஒரு வீடு. ஒங்க மகள் கலாவுக்கு அறுபதாயிரம் ரூபாய்வரைக்கும் நகை போட்டிருக்கிங்க. இது டிஸ்பிரபோர்ஷனேட் இன்கம். மூணுலட்சம் ரூபாய் முதலீடு செய்து நீங்க ஒரு சினிமாப் படம் வாங்கி எடுக்கிறதாயும் கேள்வி. ஒங்க கார்ப்பரேஷன் யந்திரங்கள நீங்களே இன்னொருவர் மூலம் வாங்கி அதிக லாபத்துக்கு விற்கிறதா ரிப்போர்ட் வந்திருக்கு. பிரிண்டர் வீட்டைச் சோதனை போட்டோம். நீங்க பிளாக் செய்ற துக்கு எழுதின லட்டருங்க, கிடச்சுது. நியாயம்' பத்திரிகைக் காக கோட்டாவுல கிடச்ச நியூஸ்பிரிண்டை ஒங்க சாவணி