பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 90 சு, சமுத்திரம் " உன் வேலையாடி..." ஒன்னை ஒன் மகளைத் தவிர வேறு யாரால ஜெயிக்க முடியும்மா? அதுக்காக நீ பெருமைப்பட்டுச்கலாம். மானேஜர் சுந்தரம், லீலா, அப்பா, வனிதா எல்லாரும் இப்படித்தான் புழுங்கியிருப்பாங்க இப்பவாவது புரியுதா?”

  • இந்தச் சமயத்துல ஊர்க்கதையாடி பேசறே..."

என்னை மன்னிச்சுடும்மா. ஒரு பொண்ணோட கதை குடும்பக் கதையாத்தான் இருக்கணும், இப்ப நான் சொல்றது உன் கதைதான். அது ஊர்க்கதையா போனதுக்கு நீதான் காரணம்! ஒருத்திக்குக் குடும்ப ஸ்டேட்டஸ்தான் முக்கியமே தவிர, ஸோவியல் ஸ்டேட்டஸ் முக்கியமல்ல. ஒன்னோட சோஷியல் ஸ்டேட்டஸ்ல என்னோட குடும்ப ஸ்டேட்டஸ் நாசமா போயிட்டுதம்மா...' நான் ஒன்னை சுமந்து பெத்தவடி..."

  • நீ என்னை சுமந்து பெத்த பாவத்தை நான் இப்ப சுமந்துகிட்டு இருக்கேனே. சொல்லி வேறு காட்டணுமா? கல்யாண வீடுகளில் என்னோடு ஆசையா பேச வர பெண் ணுங்க நான் இன்னார் மகள்னு தெரிஞ்சதும், கிண்டலா பேசறத என்னால தாங்க முடியலம்மா...'

ஆயிரம் நடக்கட்டும். அவ்வளவும் ஒனக்காகத்தான் நான் செய்தேன். இதை மறந்துடாதடி.' அத புரிஞ்சிக்கிட்டதாலதான் ஒன்கூட நான் இருக்கேன்!" மோகினி முதல் தடவையாக உண்மையிலேயே அழுதாள். மகளின் கரத்தை, 'விட்டுவிடாதே’ என்பது மாதிரியும், விடமாட்டேன்’ என்பது மாதிரியும் பிடித்துக் கொண்டாள். பயந்தாங்கொள்ளியும் நீதி தவறாதவருமான ஜெனரல் மானேஜர் ஆ தி மூ ல ம், ஸி.பி.ஐ கேஸ் என்றதும் பயந்துவிட்டார். ஆழமான நீருக்குள் விழுந்த நீச்சல் தெரி