பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 191 யாதவன், மீட்க வருபவனைப் பயத்தில் பலமாகக் கட்டிக் கொள்வதுபோல், இவரும் தனக்கேற்பட்ட பயத்தில் எல்லோரையும் இறுக்கிப் பிடித்தார். எல்லா ரிக்கார்ட் களையும் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்துவிட்டார். மற்றவர் களானால் டிபார்ட்மெண்ட்டுக்குக் கெட்ட பெயர் வரக் கூடாது என்பதற்காக மழுப்பிப் பார்ப்பார்கள். இவரோ தனக்குக் கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காகவும், அதிகப்படியான பயத்தாலும், தினமும் ஸி பி ஐ இன்ஸ்பெக் டரின் நடவடிக்கைகளுக்கு நேர்முக வர்ணனை கொடுத்து, மேலதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார். இவருடைய நமைச்சல் தாங்கமுடியாமல், மோகினியை மானேஜிங் டைரெக்டர் சஸ்பென்ட் செய்தார். உத்தியோகத்தில் சஸ்பெண்டும் உடல்நிலையில் சஸ்பென்ஸுமாகத் தவித்த மோகினியைப் பார்க்க, அன்று அவளுடைய தோழி காமாட்சி வந்திருந்தாள். காமாட்சி பெர்ஸனல் மானேஜராக, அதே கார்ப்பரேஷனில் இருப் பவள். மோகினியால் ஆரம்பகாலத்தில் டிரெயினிங்" கொடுக்கப்பட்டு, அதனால் இப்போது இந்த நாற்பத்தைந்து வயதிலும் கணவனிடம் சந்தேக உதைகளை வாங்கிக் கொள்பவள். தோழியின் உடல்நிலையைப் பார்த்த காமாட்சி, அவளை ஒரு லேடி டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போனாள். சென்னை நகரிலேயே பேர் பெற்ற ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் அவள். மோகினியின் முகத்தை அழுத்தமாகப் பார்த்த லேடி டாக்டர் உஷா, சிறிது நேர மெளனத்திற்குப் பிறகு, "நான் அபார்ஷன் கேஸ் பார்க்கிறதில்லையே' என்றாள். காமாட்சி திகைத்தாள்.

  • என்ன டாக்டர், என்ன சொல்றீங்க? நான் நமச்சலில் தவிக்கிறதா சொன்னேனே அது இவங்கதான். ஆபீஸர்...”*