பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 193 இன்னொரு நாளைக்கு வரேம்மா. நேரமாயிட்டுது. அப்பாவ போயி கவனிக்கணும். நிச்சயமா உன் கிட்ட டிரிட் மெண்ட் எடுத்துக்கிறேன்...' வாசல் வரைக்கும் போய்விட்ட மோகினியையும் அவளைப் பின்தொடர்ந்த காமாட்சியையும், ஒன் மினிட்” என்று சொல்லி அவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்து விட்டு, உஷா இருக்கையிலிருந்து எழுந்திருக்காமலே பேசினாள்: மிஸ் மோகினி. ஒங்களுக்கு வந்திருக்கிறது nரியஸ் டிவnஸ்மாதிரி தோணுது. டாக்டருங்களுக்கே தெரியாம ஆயிரம் நோய் இருக்கு. அதனால ஒரு யோசனை சொல் றேன். ஊத்துக்கோட்டைக்கு மேற்கே புத்துார் பக்கத்துல, நாராயண வன முன்னு ஒண்னு இருக்கு. அதுக்கு ரெண்டு மைலுக்குக் கிழக்கே கோனைன்னு ஒரு சின்ன நீர் வீழ்ச்சி. அங்க ஒரு யோகி இருக்கார். யோகாசனத்தால் சுகமாக்கு றார் அதோடு மூலிகை மருந்தும் கொடுக்கிறார். தியானம் செய்து திருநீறும் கொடுக்கிறார். அவர் கை பட்டா ஒங்க நோயில்லாம் பறிந்துடும். சில டாக்டர்களே கூடத் தங்க நோய்களத் தீர்க்க அங்க போயிருக்காங்க. ஒங்களுக்கு இஷ்டமிருந்தா அங்க போயிட்டு இங்கு வாங்க... இல்லாட் டாலும் வாங்க... ஒகே.” காமாட்சி உஷாவிற்குக் கையாட்டி விடை கொடுக்க, மோகினி முதுகைச் சொறிந்துகொள்ள இருவரும் வெளியே வந்தார்கள். நீண்ட மெளனம். காரில் ஏறியதும், நீயும் அந்த யோகியைப் பார்க்க வாயேன்' என்றாள் மோகினி. ஒன்னோட இவ்வளவு வந்ததுக்கே என் ஹஸ்பண்ட் உதைச்சாலும் உதைப்பாரு, அங்க வந்தால் அவ்வளவு தான... மோகினி, நாளைக்கே நீ போ! என் டிரைவரை அனுப்புறேன்! நாளைக்கே போ...' நான் இன்னும் தீர்மானம் பண்ணலே.' ச.-48