பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 சு சமுத்திரம் பாவிகள் ஜெயிக்கலாம். ஆனால் பாவம் ஜெயித்த, தில்லை. ஜெயித்ததுபோல் தோன்றும் பாவிகளுக்கு, இறுதி நாள் பயங்கரமாக இருக்கும். அவர்களை நாம் மீட்க வேண் டாமா? ஆகையால் அன்பர்களே, குடும்ப வட்டத்தை உதிர்த்து, சமூக வட்டத்தைப் பெரிதாக வரையுங்கள். பாவி களிடமிருந்து அப்பாவிகளைக் காப்பதே ஈசுவரனுக்கு செய்யும் யாகமாகும். பாவிகள் செயலை சகித்து, அதர்ம வினையின் கணக்கைப் பெரிதாக்க வேண்டாம். பிறர் வயிற்றில் அடிப்பவர்களைத் தடுப்பதே, ஈசுவரனுக்குச் செய்யும் நைவேத்யம். அக்கிரமத்திற்கு எதிரான போரே ஆண்டவன் விரும்பும் அர்ச்சனை. பாவிகளின் துவக்க கால வெற்றி, இறுதிகால தோல்வி. பாவ எதிர்ப்பாளர்களின் துவக்க கால தோல்வி, இறுதி கால வெற்றி, பாவிகளால், இந்தப் போராட்டத்தில் பழிவாங்கப்பட்டால், அதுவே மிக மிகப் பெரிய வெற்றி. தர்மம் என்பது, ஏதோ நீ செய்யக்கூடிய பெரிய தியாக மல்ல. அது, நீ ரோகத்தில் விழாமல் இருக்க உனக்கு நீயே செய்துகொள்ளும் ஒரு தற்காப்பு யக்ஞம். நீ போராடி னாலும் போராடாவிட்டாலும் ஆண்டவன், சதா கவனிக் கிறார். கர்மவினைகளைக் கணக்கெடுத்து விடையேறு பாகன் விடை தருகிறான், பாவிகள் கர்மவினைகளை அனுபவிக்காமல், போக மாட்டார்கள் இந்தக் கலியுகத்தில் நாம் செய்த தீவினை களை இந்த ஜென்மத்திலேயே நாம் அனுபவித்தாக வேண்டும். ஆங்காங்கே செய்த புண்ணியங்களினால், கர்ம வினைப் பயனை கழிக்க முடியாது. ஈடுகட்ட முடியாது.' மோகினி, மகளைக் கட்டிப் பிடித்து அணைக்கத் துடித்த கரங்களை ஒன்றோடொன்று சேர்த்துக் கட்டிக்கொண்டு, பேசாமல் ஆசிரமத்தின் நுழைவாயிலிலேயே நின்றாள். லீலா அவளை அடையாளம் கண்டுகொண்டது போலத் தோன்றியது. தெய்வம்போல் இருந்த என்னவரை நீ பிண.