பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 1 99 மாக்கினாய். நானோ பிணம்போல் இருந்த உன்னவரைத் தெய்வமாக்கியிருப்பதைப் பார்த்தாயா?" என்று அவள் சொல்லாமல் சொல்வதுபோலவும் தோன்றியது. அதே சமயம், ஒன்னயும் கடவுள் உலகத்துல உலாவவிட்டிருக் காருன்னா அதுலயும் ஒரு சூட்சுமம் இருக்குடி... ஒன்மூலம் எத்தனை பொம்பளைப் பொறுக்கிப் பேர்வழிகள் பொறுப் பான உத்தியோகத்துல இருக்காங்கன்னு காட்டத்தான் உன்னை வச்சிருக்காரு என்று ஒரு காலத்தில் லீலா இயலா மையில் சொன்ன வார்த்தைகள், முளைக்காமல் போகும் என்று அலட்சியமாக முடக்கிப் போடப்பட்ட வார்த்தை வித்துக்கள், இப்போது கருவேல மரங்கள்போல, அவற்றின் முட்கள்போல, மோகினியைக் குத்தின. இவ்வளவும் செய்துட்டு நமக்கு அங்கே போக என்ன யோக்கியதை இருக்கு" என்று நினைத்தவள்போல், மோகினி நின்ற இடத்திலேயே நின்றபோது, தற்செயலாக எழுந்த லீல்ா அவளை அடையாளம் கண்டுகொண்டாள். குழந்தை மாதிரி ஓடிவந்து, மோகினியைக் கட்டிப்பிடித்து அணைத்த வாறே அவளை ஆசிரமத்திற்குள் அழைத்துக்கொண்டு போனாள். பேசிக்கொண்டிருந்த சாமியார், பேச்சைச் சிறிது நிறுத்திவிட்டு, அபயகரம்போல் கையைக் காட்டிவிட்டு, மீண்டும் பேசினார், ஆண்டவனிடம் மன்னிப்புக் கேட்க ஒவ்வொரு ஜீவ னுக்கும் யோக்கியதை உண்டு. சொல்லப்போனால், ஒருவன் பாவியாவதில், அவனை அல்லது அவளைப் பாவி யாக உருவாக்குவதில் சமுதாயத்திற்கும் பங்குண்டு. இருபதுபேரை ஏற்றிச் செல்லும் படகு இருபத் தொன்றாவது ஆளை ஏற்றிச் செல்லும்போது கவிழ்கிறது என்றால், அதற்கு அந்த இருபத்தோராவது ஆள் மட்டும் காரணமல்ல. ஏற்கனவே இருந்த இருபது பேரின் பளுவும் காரணம். இதுபோலத்தான் பாவமும் பாவிகளும். சிலர்