12சு. சமுத்திரம்
சத்தியத்துக்குக்
கைப்பிடித்தாள், அவர்களுக்காகவே தவமிருப்பதுபோல் நின்ற ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். பானு ஆணையிட்டாள்.
“எங்கள்ல யாரும் ஜம்ப் பண்ணமுடியாதபடி, ஸ்பீடாய் போங்க!” செல்வம் அவளின் உட்பொருளை உணர்ந்தது போல் சிரித்தபடி பேசினான்.
“அதுக்காக ஆட்டோ ஜம்ப் பண்ணிடப்படாது. பார்த்து ஓட்டுங்க.”
ஆட்டோ டிரைவர் பார்த்து ஓட்டினார். ஒருத்தருக்கு ஒருத்தர் என்று பிறக்கவில்லையானாலும், இறக்கத் தயாராய் இருப்பவர்கள்போல தோன்றிய அந்த இளம் ஜோடியை பார்த்துத்தான் ஓட்டினார். பல்வேறு ஜோடிகளை அனுபவத்தால் கண்டுணர்ந்த அந்த டிரைவர், ஒரு நிஜ ஜோடியைப் பார்த்த திருப்தியில் நிமிர்ந்து ஓட்டினார்.
2
அசோக மரங்களும், தூங்குமூஞ்சி மரங்களும் நிறைந்த புல்வெளியின் நடுநாயகமான பங்களா. அதன் வரப்பு போலிருந்த குரோட்டன்ஸ் செடிகளை வேலையாள் ஒருவர் அழகுபட சிகையலங்காரம் செய்துகொண்டிருந்தார். டிரைவர், காரை கழுவிக்கொண்டிருந்தார். ஆட்டோவில் பானுவோடு இறங்கியவனைப் பார்த்ததும், இவர்களுக்கெல்லாம் தங்கள் இனத்தவனைப் பார்த்தது போன்ற திருப்தி, அல்லது அதிருப்தி. ஆனாலும் அவனின் கம்பீரமான தோற்றத்தையும் பங்களாவையும், பகட்டான காரையும் பார்த்து மயங்தவன்போல் நடந்த செல்வத்தைப் பார்த்த கண்களோடு, அவர்கள் தங்களுக்குள்ளே கண்ணடித்துக்