பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் மணப்பெண்போல் நாணி நின்றான். சினிமாவில் வருகிற பண்ணையார் மாதிரி இல்லாமல், கதர் ஜிப்பாவும், கதர் வேட்டியுமாய் தோற்றங்காட்டி தணிகாசலம் அவனை உட்காரு தம்பி' என்றார். அந்தக் கணிவான குரலைக் கேட்டதும், செல்வத்திற்கு தைரியம் வந்தது. நாற்காலியில் உட்காரப்போனான் பிறகு, அவர் உட்காராமல் இருப் பதைப் பார்த்துவிட்டு, நாற்காலி சட்ட த்தில் பிடித்த கையை எடுத்துவிட்டு நின்றான். தணிகாசலம், பயல் நடிக்கிறானோ என்பதுபோல் நோட்டம் விட்டபடியே உட்கார்ந்து, அவனையும் உட்காரும்படி சைகை செய்தார். செல்வம், அவரையும் அவருக்கு எதிர்ப்பட்ட சோபா செட்டில், கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருந்த அவர் மகன் பாஸ்கரனையும் ஒரு சேரப் பார்த்தான் இது அறுபது: அது முப்பது; இது கதர் மயம்: அது டெர்லின் மயம்: அதன் கண்களில் சொத்தின் சுமை, இதன் கண்ணில் அதன் சுவை. அப்பனும் மகனும் தன்னை மாறி மாறி நோட்டம் விடுவதை நோட்டம் விட்டு ஆறுதலுக்குகாக பானுவைப் பார்த்தான். அவளோ கையில் உயிரை வைத்திருப்பவள்போல், அதைப் பிடித்துக்கொண்டிருந்தாள். நீண்ட மெளனம். விழிகளின் கண்காணிப்பு, உணர்வுகளை, எடைக் கற்களாய் கொண்டு மனத் தராசுத் தட்டுக்கள் அங்குமிங்கும் ஆடிக்கொண் டிருந்தன. இதற்குள் மைதிலி, ஒரு தட்டில் பிஸ்கட்டுகளையும், அதனோடு நான்கு உயையும் கையேந்தி நடந்து வந்தாள். அவளுக்கு இருபத்தெட்டு வயதிருக்கலாம். சிவப்பு நிறம் இல்லையென்றாலும, உடலில் பரவிய செழுமையும், முகத்தில் பூத்த மதர்ப்பும் ஒருவித கட்டழகு கவர்ச்சியைக் காட்டிக் கொண்டுதான் இருந்தது. அண்ணி செல்வத்தையே பர்த்தபடி நடந்து வருவதால். இடறி விழுவாளோ என்று பயந்தவள்போல், பானுமதி எழுந்து அண்ணியிடமிருந்து தட்டை வாங்கி உபாயில் வைத்தாள். அவளுக்கு, பலமான