பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் உயில் விவகாரத்தை ஒசைப்படாமல் எழுதிய அப்பாவை கருவியபடியே பார்த்த பாஸ்கரன், சிறிது தெம்படைந்தான் "பார்த்தீங்களா... ஒன் அப்பா செயத காரியத்தை' என்று கணவனின் இடுப்பை அரவம் இல்லாமல் கிள்ளி செய்கையால் பேசிக்கொண்டிருக்கிறாள் மைதிலி. பானுமதி தன் காரியம் இவ்வளவு எளிதாய் தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்காதவள்போல், தரையில் கால் பாவாதவளாய் அங்குமிங்குமாய் நடந்தாள். பரவ17 யில்லையே... செல்வம் வெளுத்து வாங்கிவிட்டாரே!...போடி அவரு வெளுத்தும் வாங்கல, மறுத்தும் வாங்கல. மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லிட்டார். அண்ணிமாதிரி அமுக்கத் தேவையில்லாதவர். மகாத்மா காந்தி சொன்னது மாதிரி வாழ்க்கையையே ஒரு செய்தியாக்க நினைத்தவரு. உண்மைக்கு எதுக்கு மேக்கப்?" தணிகாசலம், செல்வத்தை வாஞ்சையோடு பார்த்தார். பிறகு பின்னால் நின்ற பானுவின் கையைப் பிடித்து முன் பக்கமாய் கொண்டு வந்து, அவள் இடையைப் பிடித்தபடியே பேசினார்.

  • எப்படியோ... எல்லாம் நல்லவிதமாய் முடியுது. என்னோட அனுபவத்தை வச்சு, ஒன்னை பார்த்தபோது, நீ திறந்த மனசுக்காரன். பழி பாவம், பொய், மோசடி இதுக்குத் தவிர, எதுக்கும் பயப்படாதவன் என்கிறது எனக்கு புரிஞ்சுட்டுது. இந்த வீட்ல மூணும் மூணு விதம். இவன் முன்கோபி, சின்ன வயசிலேயே செல்வமாய் வளர்த்த தால் கஷ்டத்தைத் தவிர, எல்லாவற்றையும் தெரிஞ்சவன். பானு சென்ஸிட்டிவ், தொட்டால் சுருங்கி; என் மருமகளோ தொடாமலே சுருங்கி. நீ குடும்பத்துல ஒரு ஆளாய் ஆயிட்ட தான ஒன்கிட்டே இதை சொல்லறதுல தப்பில்ல. ஆனாலும் மூணுபேரும் ஒருவர் குறையை இன்னொருவர் நிறை,