பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் தாள். எப்படியோ, அவன் அவற்றைத் தள்ளுபடி செய்து விட்டான். கடைசியாக ஒரு நாள் தீர்மானமாகச் சொல்லி விட்டான். ஒன் அப்பாவாய் மனம் மாறி, என்னைக் கூப்பிடும் முன்னால், நாம் தனித்துப் பேசுவதில் அர்த்த மில்லை' என்று கூறிவிட்டான். ஆனால், அன்றைக்கு அவனுக்குப் பிரிவின் உச்சகட்டம். அவளைப் பார்க்காமல் இருக்க முடியாத தவிப்பு: பார்த்துத் தான் ஆக வேண்டும் என்ற துணிவு: அவளில்லாமல் வாழ முடியாது என்ற நிதர்சனம். அதேசமயம், ஒரு குடும்பத் திற்குள் ஆமைபோல் புகலாகாது என்ற கண்டிப்பான எண்ணம். வாழ்க்கை, காதலைவிடப் பெரியது என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். ஆனாலும், கண் முன்னால் அவளே வந்தாள். கடற்கரையும் அவ்வப்போது அவளோடு பார்த்த திரைப்படங்களும், அவனை அலைக் கழித்தன. அலுவலகத்திற்கு அவள் டெலிபோன் செய்வாள் என்று எதிர்பார்த்தான். அவளும் வைராக்கியமாயிருந்தால், அதில் தவறில்லை என்றும் மனதுக்கு புத் திமதி சொன்னான். அறைக்கு வந்தவனால், நிலைப்பட முடியவில்லை. தன்னையும்.மீறி, மளிகைக் கடைக்குப் போய், அவள் வீட்டுக்கு டெலிபோன் செய்யப் போனான். ரிளிவரைக் கூட எடுத்துவிட்டான். ஏனோ டெலிபோன் செய்ய இயல வில்லை; திரும்பி அறைக்கு வந்து அலைமோதினான். ஒரு வேளை தான் நடந்துகொண்ட விதம் தவறுதானோ என்று நினைத்துக்கொண்டான். இருக்க முடியவில்லை. எழுந்தான். எழமுடியவில்லை இருந்தான். இரண்டையும் செய்ய முடியாமல் படுத்தான். வளையல் சத்தம் கேட்டும், அவன் கண் திறக்கவில்லை. காதுக்கு இப்படிப்பட்ட சத்தத்தை பல நாளாய் கேட்கிற அவனுக்கு, அப்போது அந்தச் சத்தமும் ஒரு பிரமை போல் தான் தோன்றியது. ஆனாலும், முகத்தில் ஏதோ ஒன்று தடவுவதைப் பார்த்துவிட்டுக் கண் விழித்தான்.