பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 33 சமத்தையாய் உயில் எழுதி வச்சிருக்கேன். சொல்லாமல் கொள்ளாமல் போயிட்டாள் பாரு! நான் கண் மூடின பிறகா வது அவனைக் கட்டியிருக்கலாம் சரி எப்படியோ அவனைக் கட்டிக்கிட்டாள். போகட்டும்... தொலையட்டும்... புருஷன் வந்துட்டதனால் பெத்தவனை மறந்துடனுமா முத்தம்மா... நான் உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கேன்னு அவளுக்கு தெரியாமலா இருக்கும்? அப்படியே தெரியாவிட்டாலும் என்னை ஒரு தடவை, ஒரே தடவையாவது வந்து பார்க்கக் கூடாதா... சொல்லு முத்தம்மா... நீயும் பிள்ளைகுட்டிக் காரி! ஒனக்கு இருக்கிற கரிசனத்துல என் மகளுக்கு ஆயிரத்துல ஒன்று இல்லாமல் போயிட்டுது பாரு!' முத்தம்மாவுக்கு அழுகை அழுகையாய் வந்தது. வேலை யாட்களையும், பிள்ளைகள் மாதிரி பாவிக்கும் அந்தப் பெரியவரின் கண்களைத் துடைத்துவிட்டாள். பிறகு, அக்கம்பக்கம் பயத்தோடு பார்த்துக்கொண்டே ஜாக்கிரதை யாகப் பேசினாள் : அந்த பாவிப் பொண்ணு. தினமும் வீட்டு கேட்டு வரைக்கும் வந்துட்டுத்தான் போகுதுங்க அய்யா! ஓங்க மகன், அதை உள்ளே விடப்படாது; அப்படி விட்டால் நாங்க வேலையில் இருக்கமுடியாதுன்னு கண்டிப்பாய் சொல் லிட்டது. இன்னைக்கு வந்து கண்ணிர் விட்டு கதறிச்சுது... அப்பா உங்களைப் பார்த்தால், அவருக்கு உடம்பு மோசமா யிடும். அதனால பாக்க முடியாது'ன்னு இதோ, இந்தப் பாவியே, சின்ன முதலாளி சொல்லிக் கொடுத்ததை ஒப்பிச் சேன், அப்போ, நான் எடுத்து வளர்த்த பொண்ணு அப்பாவை அவருக்குத் தெரியாமல் தொலைவில் நின்றாவது பார்த்துட்டுப் போறேன்னு கண்ணிரும் கம்பலையுமாய் புலம்பிச்சுது. நான் என்னோட ஒரு சாண் வயித்துக்குப் பயந்து ஒங்க பொண்ணை துரத்திட்டேன். அவளை 3 سس های