பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் உள்ளே விட்டால் ஒன்னை சுட்டுப் பொசுக்கிடுவேன்னு அய்யா வேற மிரட்டியிருக்கார். இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தேங்க அய்யா!' தணிகாசலம் திடுக்கிட்டவர்போல் விழிகளை உருட்டி னார். மேலே ஒடிய மின்விசிறிகளையே வெறித்துப் பார்த் தார். முத்தம்மா, அவரைக் கட்டிலில் கிடத்திவிட்டு, ஒடுங்கிப்போய் நின்றாள். அவளுக்கு அவரைப் பார்க்கப் பாவமாகவும் பயங்கரமாகவும் தோன்றியது. தணிகாசலம் தட்டுத் தடுமாறிப் பேசினார். நாளைக்கும் வருவாளா முத்தம்மா?’’ கண்டிப்பா வருங்க அய்யா...”*

  • நீ ஒன்று செய்...அவளைப் பார்த்ததும், பார்க்காதது மாதிரி ஒதுங்கிக்கோ!'

நீங்க உத்தரவு கொடுத்திட்டிங்க, நான் எதுக்கு ஒதுங்கணும். இப்பதான் எனக்கு விஷயமே புரியுது. என்ன ஆனாலும் சரி, துப்பாக்கிக் குண்டு பாய்ஞ்சாலும் சரி, நாளைக்கு அம்மாவைக் கையோட கூட்டி வாரேங்க அய்யா..." தணிகாசலம் திருப்தியோடு தலையாட்டியபோது, முத்தம்மா வெளியேறப்போனாள். அவளை சின்னக்குரவில் கூப்பிட்டார். என்னங்க அய்யா!' ஆள் எப்படி இருக்காள் முத்தம்மா?" கண்ணால் பார்க்க முடியாதுங்க அய்யா...' அப்படின்னா...' குடும்ப வாழ்க்கையில குறை இருக்குது மாதிரி தெரிய விங்க அய்யா! ஏன்னா... இன்னைக்கு அந்தப் பிள்ளையாண் டானும் வந்தாரு நம்ம அப்பாவைப் பார்க்க முடியலியே