பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎移 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் எதிர்பார்த்து வாசலை நோக்கி தலையைத் திருப்ப முடியாத பலவீனம். எதிரே தென்பட்ட முத்தம்மாவிடம், மன மிருந்தும் கேட்கமுடியாத சோகம். பலாப்பழம்போல், விம்மி இருக்கும் அவர் மேனி, புடலங்காயாய் கூம்பிக் இடந்தது. உடம்பு ஒடுங்க ஒடுங்க, உள்ளமோ, பூதாகார மாய் பேரிரைச்சல் போட்டுக்கொண்டிருந்தது. பானுமதி, ஜட்டிபோட்ட குழந்தையாகவும் பிராக் போட்ட சிறுமியாக வும், பாவாடை தாவணி பருவத்தாளாகவும், புடவை கட்டிய பேரிளம் பெண்ணாகவும் மாற்றி மாற்றி வடிவு காட்டிக்கொண்டிருந்தாள். அவர் மனம், பிராக் போட்ட சிறுமி பானுமதியிடமே லயித் திருந்தது. அம்மாவைப் பினமாக தேரில் வைத்தபோது, கைதட்டிச் சிரித்து, எல்லோரையும் அழவைத்த அந்த மோகன உருவத்தையே அவர், சிந்தனை சித்ரவதைக்குள் சிறைப்படுத்திக்கொண் டிருந்த வேளை. திடீரென்று சப்தநாடிகளை ஊடுறுவிய ஒலம். அப்பா... அப்பா...' என்ற அவல ஒலி, ஒங்களை இந்த கதிக்காக்கிய நான் பாவிப்பா... எனக்கு மன்னிப்பே கிடையாதப்பா..." என்று நெஞ்சே வெடித்து, வாயாய் வ வெடுத்து. வார்த்தை வடிவங்களாய் சின்னா பின்னமாய் சிதறு தேங்க யாய், விழுந்து கொண்டிருப்பது போன்ற ஒல ஒலி. தணிகாசலம் லேசாய் முதுகை வளைத்துப் பார்த்தார். பானுமதி, அவர் கால் பாதங்களை கட்டிக்கொண்டு, கதறிக்கொண்டிருந்தாள். பிறகு தந்தையை, பாதாதிகேசம் வரை பாவித்து, அவர் மார்பில் தலைபோட்டு, அதை உருட் டிக்கொண்டிருந்தாள். சொல்லுக்கு சொல் அப்பா... அப்பா! வார்த்தைக்கு வார்த்தை நான் பாவிப்பா... படு பாவிப்பா... என்ற ஒலப் பெருவொலி முத்தம்மா, அ வ ைள ப் பிடிக்கப் போனாள். தணிகாசலமோ, அவளைக் கையாட்டி தடுத்துவிட்டு, துவண்டு கிடந்த கையை எடுத்து, அவள் தலையில்