பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 39 பெற்ற மகளை... சாகப்போகிற அப்பாகிட்டே விடாமல் இருக்கிறதுக்கு நான் ஒன்றும் மிருகமில்ல. அரக்கி இல்ல... நாயில்ல... பன்றியில்ல...' ஒன்கிட்ட எனக்கென்ன பேச்சு...யோவ் செல்வம், ஒன் பெண்டாட்டியைக் கூட்டிட்டு மரியாதையாய் வெளியே போறியா... இல்ல கழுத்தைப் பிடிச்சு நானே தள்ளனுமா?" செல்வம், அவனுடைய வார்த்தைகளை உள் வாங்காமல், கட்டிய கைகளை விலக்காமல், மாமனாரை நோக்கிய விழிகளைத் தாழ்த்தாமல் நின்றான். தணிகாசலம் போயிடாதிங்க.." என்ற வார்த்தைகளை உதடுகளால், ஒசையின்றி உச்சரித்து, திரையிட்ட கண்களால் தீவிர் சோகத்தோடு பார்த்துக்கொண்டே இருந்தார். பாஸ்கரன் அதட்டினான். "யோவ் ஒன்னைத்தான்...தானா போறிங்களா...நானா போக வைக்கணுமா...' சில்லிட்டவளாய் நின்ற பானு, சிலிர்த்து எழுகிறாள். எங்களைப் போகச்சொல்ல நீ யார்?’’ என்ன சொன்ன...” என்னைப் போகச்சொல்ல நீ யாருன்னேன்? இது என்னோட அப்பா... இது நான் பிறந்த வீடு... இன்னும் சொல்லப்போனால் என் பெயர்ல பதிவாகியிருக்கிற வீடு... ஒன்னை நான்தான் போகச் சொல்லமுடியுமே தவிர, நீ என்னைப் போகச் சொல்ல முடியாது!' பாஸ்கரனால் பதிலளிக்க முடியாமல், கோபம் வந்தா லும், கொப்பளிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. இதுக்குத்தான் இந்தக் கிழவனை உயிலை மாற்றச் சொன் னேன். கிழவர் சம்மதிக்கப்போகிற சமயத்தில் இந்த கிராதகி வந்துட்டாள். என்னமாய் மகளைப் பார்க்கிறார்: