பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 4 I பேசிட்டார். தங்கை வாழ்க்கையைக் கெடுத்துட்டாளே என்கிற கோபம். இதுக்கும் அன்புதான் அடிப்படைக் காரணம். விட்டுத் தள்ளும்மா...' பானுமதி. கண்களைத் துடைத்துக்கொண்டாள் மைதிலி, பாஸ்கரனைக் கிள்ளியதையும், கண்களால் குறிப் புணர்த்தியதையும், எதேச்சையாக அந்த நிலையிலும் பார்த்து படபடத்தார் தணிகாசலம். அவளை நம்பாதிங்க... ஏதோ திட்டம் போட்டு பேசறாள்' என்று மகனைப் பார்த்துப் பேசப் போனார். முடியாதுபோகவே, தன்னையே தவிப்போடு பார்த்த மருமகனிடம் சமிக்ஞை செய்யப் போனார். உள்ளம் நினைத் தாலும் உடல் அதுக்கு உருக்கொடுக்க மறுத்தது. பிரம்மப் பிரயத்தனம் செய்தும், அவரால் முடியவில்லை. மகனை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடப் போனார். மருமகளைக் கண்களால் கெஞ்சப்போனார். எதுவுமே எடுபடவில்லை, இறுதியில் இயலாமையில் தவித்து, பா...பா...என்ற கோரக் குரலிட்டபடியே, எங்கோ கண்கள் மொய்த்து, பிறகு மூடிக்கொண்டன. வாய் சொல்லமுடியாத தோல்வியில், திறந்து கிடந்தது. கைகள் சமிக்ஞை செய்யமுடியாத ஏமாற்றத்தில் துடித்துக் கொண்டிருந்தன. இதுவரை, அழாமல் நின்ற செல்வம், வாய்விட்டுக் கதறினான், எதிரே தென்பட்ட முத்தம்மாவைக் கட்டிப் பிடித்தபடியே, கண்ணிர் விட்டான். பானு ஸ்தம்பித்து நின்றாள். மைதிலி வாய்விட்டு அழுதாள். 6 அப்படியும், தணிகாசலத்தின் உயிர், இரண்டுநாள் உடலோடுதான் கிடந்தது. அப்புறம் அவரும் முடிந்து, அதற்கான காரியங்களும் முடிந்து, ஒரு வாரத்திற்கு மேலாகி