பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1V சுத்தக் காற்றை சுவாசித்து சுதந்திரமாக வெளி உலகைக் காண வந்த என் இதயத்திலே உணர்ச்சிப் பெருக்காக ஓடிவந்த வரிகளை இங்கே வடிக்கின்றேன். சத்தியம் என்றால் என்ன என்று ஆராயும் காலம் இது. "சத்தியமாகச் சொல்கிறேன்' என்றால், உண்மையாகச் சொல்கிறேன்' என்று பதிவாகிறது. சத்தியம் என்பது வெறும் உண்மை மட்டும்தானா? ஆழ்கடலின் முத்தை மூழ்கி எடுப்பது போன்று சத்தியத்தின் பொருளை ஆய்ந்து, அனுபவித்து அறிஞர்தம் துணைகொண்டுதான் சத்தியத்தின் பொருளை நாம் அறிய முடியும். என்றாலும் நானறிந்த வரையில் சத்தியம் என்பது ஒரு உயர் நெறி! ஒப்பற்ற ஒரு வழி! பழுதில்லாதொரு பண்பு காசினியினை மேம்படுத்தும் கலாச்சாரம்: நட்பு இறவாதது-இது ஒரு நெறி. நண்பர் தர்மலிங்கம் நட்பை மறவாது, தன்னை வருத்திக்கொண்டு, முப்பதாண்டு களுக்கு முன்னே பார்த்த என்னை, தேடிக் கண்டுபிடித்தது சத்தியத்திற்கு சாவில்லை என்பதைத்தானே பறைசாற்றுகிறது. கண்டவுடன் என் கைகளில் திணித்த கதைத் தொகுப்போ இன்னொரு நண்பர் திரு. சமுத்திரத்தின் சிந்தனைக் கடலில் தோன்றிய ஒளிமுத்துக்கள்- இப்பொழுது சொல்லுங்கள் நட்பு நெறியும் ஒரு சத்தியந்தானே! நண்பர் தர்மலிங்கத்தைப் போன்றே தளராத உழைப் பினால் இன்று தமிழர் உள்ளங்களிலே கொலுவிருப்பவர். கல்லூரி நாட்களிலிருந்தே நாங்கள் இணைந்திருந்தோம். சமுத்திரம் தடைகள்ைத் தாண்டி வந்தவரல்ல-தகர்த். தெறிந்து வந்தவர்-சவால்களைச் சந்தித்து-சதிகளை சவக் குழியிலிட்டு முன்னேறியவர். சமுத்திரத்திலே ஆர்ப்பரிக்கும் அலைகளும் உண்டு-அழகிய முத்தும் உண்டு-எரிமலை முகட்டுகளும் உண்டு-எழில் கொஞ்சும் பவழப் பாறைகளும் உண்டு.