பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் என்ன பானு நீ! அண்ணன் குடித்து உடம்பைக் கெடுத்துக்கிறாரேன்னு கவலைப்படுறேன்னு நெனைச்சேன் r கடைசில பேக்டரி போயிடுமேன்னுதான்...'

  • என்ன இன்னும் ஒங்களால புரிஞ்சுக்க முடியவியா? இல்ல என்னாலதான் ஒங்களுக்குப் புரியவைக்க முடியலியா? அண்ணன் குடிச்சு, உடம்பைக் கெடுக்காரேன்னு எந்தத் தங்கையாவது கவலைப்படாமல் இருப்பாளா? அந்தக் கவலையில், சொத்தும் அழியுதென்னு இன்னொரு கவலை யும் வந்தால், அதுல என்ன தப்பு? அவனைக் கண்டிக்க ஆளில்லாமல் போயிட்டு. அதனாலதான் இந்த ஆட்டம்.”*

சரி நான் போய் ரெண்டு அதட்டல் போட்டுட்டு வரட்டுமா. ’’ -ஒங்களுக்கும் வாய்ல பலவந்தமாய் ஊற்றிவிடுவான். நீங்க கீழே போனால் அவன் மீண்டும் வீம்புக்குத்தான் குடிப்பான் வேறுவிதமாய் அவனைப் பிடிக்கணும்.' • எப்படி?’’ "அம்பத்துரர் பேக்டரி பொறுப்பை நீங்க ஏற்றுக்கணும்." 'ஆரம்பிச்சுட்டியா...அதிகார போதை, குடி போதையை விட மோசமானது!' பொறுப்பற்ற தனம். இந்த ரெண்டு போதையையும் விட பெரிய போதை, என் முகத்தைக் கூட நீங்க பார்க்க வேண்டாம். இதோ என் அண்ணன் மகள் முகத்தைப் பாருங்க. நாளைக்கு, அண்ணா எல்லாற்றையும் அழிச் சுட்டு, கடன்காரன் கிட்டே மாட்டினால், நிச்சயம் நானே பேக்டரியை விற்றுக் கொடுப்பேன். அப்படியும் ஒரு நிலைமை வந்தால் இவளோட எதிர்காலம் என்னாகிறது? அது மட்டு மல்ல. பொறுப்பில்லாத ஒருவன், இந்த வீட்டு மாப்பிள்ளை யாய் காலெடுத்து வச்சான். வீடே தரைமட்டமாயிட்டுன் னு, ஒரு பழிச்சொல் வந்தால்...'