பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 & சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் செல்வம், முதன் முதலாக, பானுமேல், லேசாய் கோபப் பட் டான். இந்த வம்பு வேண்டாமுன்னுதான்...நான் இவள் கிட்டே படிச்சு படிச்சு சொன்னேன். ஒங்களுக்கு உதவி செய்யுறதாய் நெனச்சுத்தான் நான் ஒப்புக்கொண்டேன். உபத் திரவம் செய்யுறதுக்கு @త్వు. ஆளை விடுங்க சாமி!' விடாமல் பிடிச்சா வச்சிருக்கேன். நல்லாத்தான் நடிக்கிறீங்க!' அண்ணா! என்னைப் பேசு, பொறுத்துக்கிறேன். வேணுமுன்னால் அடி, பட்டுக்கிறேன். இப்படிப்பட்ட பிரதர் இன்லா கிடைச்சதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும். வேறொருவராய் இருந்தால்...' சொல்லு ஏன் நிறுத் திட்டே..." "சொல்லிடுறேன். வேறொருவராய் இருந்தால், நீ ரேஸுக்கு போய் ஆயிரம் ஆயிரமாய் விடுறதுக்கு, ஐயாயிரம் கேள்வி கேட்டிருப்பார். ' சபாஷ்! நான் ஒன்னை தங்கச்சியா நினைக்கிறேன். நீ என்னை பங்காளியா நினைக்கிற!" " அப்படி நினைத்திருந்தால், இந்த வீட்ல நேற்று நீ ஆடுன ஆட்டத்துக்கு என்னவெல்லாமோ நடந்திருக்கும்!' அந்த அளவுக்கு வந்துட்டியா? மவராசியா ஒன் புருஷனை பேக்டரிக்குப் போகச் சொல் நான் யார் கேட்க!' ஏண்ணா பைத்தியம் மாதிரி உளறுறே. ஒன் மைத்துனர் பேக்டரி நிர்வாகியாய் இருந்தால், ஒனக்கும் பெருமைதானே! இதை ஏன் மறந்துடுறே. நாம் ஆயிரம் சண்டை போட்டாலும் அண்ணன் தங்கைன்னு இல்லாமல் போயிடுமா? ஏதோ குத்துபழி வெட்டுபழி நடக்கிறது மாதிரி ஏன் பேசுறே!'