பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 59. மைதிலி ஈரக் கூந்தலோடு ஒடி வந்தாள். அடடா ஆரம்பிச்சுட்டிங்களா...ஒங்க சண்டையை? ஏன் இப்படி எலியும் பூனையும் மாதிரி நிற்கிறீங்க!' "நீங்களே சொல்லுங்க அண்ணி! பேக்டரி நிர்வாகத்தை, எடுத்துக்கும்படி, இவரை கெஞ்சிக் கூத்தாடி, நான் எப்படியோ சம்மதிக்கவச்சேன். அண்ணன் ஒங்க சொத்து. என் சொத்துன்னு பிரிவினை பேசுறாரு . இப்போ கூட இந்த நாற்காலியில் உட்கார்ந்து சத்தியமாய் சொல்றேன். அண்ணாவா, சொத்தான்னு ஒரு நிலைமை ஏற்பட்டால் எனக்கு அண்ணன்தான் வேணும்.' செல்வம், குறுக்கிட்டான். டைப்பிஸ்ட் வேலையா, பேக்டரி நிர்வாகமான்னு நீங்க என்னைக் கேட்டிங்கன்னா? நான் டைப்பிஸ்ட் வேலை யைத்தான் வேணும்பேன்! என்னைத்தான் யாரும் கேட்க மாட்டேன்றீங்களே! அப்படிக் கேட்டாலும், நான் நடிக் கிறேன்தான். அத்தான் கேட்டாலும்.' மைதிலி, சிறிது நேரம் பேச்சற்று நின்று கணவனை ஒரக்கண்ணால் பார் த் தா ள், பிறகு அட்டகாசமாகப் பதிலளித்தாள். ஏங்க, ஒங்களுக்கு ஏன் தடி வார்த்தையாய் வரது? அண்ணன் பேக்டரியை கவனிக்கிறதால, ஒங்களுக்கு என்ன கஷ்டம்? அண்ணனை எதுக்காக நடிக்கிறதாய் சொன்னீங்க? ஒங்க தங்கையை என்ன வேணுமுன்னாலும் பேசுங்க. எங்க அண்ணனை எப்படிப் பேசலாம்? சரி பேசினது போதும்; வர திங்கட்கிழமை பெளர்ணமி நிறைந்த நாள். அன்றைக்கு, அண்ணன் பேக்டரில போய் பொறுப்பை எடுத்துக்கணும்... இந்தப் பேச்சும் இதோட நிற்கணும்.' அதுவரைக்குமாவது... நான் என் டைப்பிஸ்ட். வேலைக்குப் போறேன்!”