பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 க. சமுத்திரம் சத்தியத்துக்குக் பார்க்க முடியாமல் பானுவை அர்த்தத்தோடு பார்த்தான். அவளோ நாணப்பட்டு, அங்கே நிற்கமுடியாமல் மாடிப்படி களைத் தாவினாள். பின்னால் போகப்போன செல்வத்தை, மைதிலி உபசரிப்பால் தடுத்தாள். ஒரேயடியாய் சாப்பிட்டுப் போகலாம் அண்ணாr முத்தம்மா, நீ ஏன் பேச்கு மாதிரி நிற்கிறே: நேரம் ஆகுதுல்ல. வீட்டுக்குப் போடி!" முத்தம்மா போய்விட்டாள். செல்வம், டைனிங் டேபிளில் உட்கார்ந்தான். மைதிவி, முதலில் தட்டைக் கொண்டுவந்தாள். அப்புறம் டம்ளர். அப்புறம் சாதம், அப்புறம் பொறியல், அப்புறம் சாம்பார்: ஒரேயடியாய் கொண்டு வரலாமே.”* என்று கேட்கப்போன செல்வம், கடற்கரையில் பானு, தன்னை கடல் மண்ணில் இழுத்ததை ரளித்தபடியே, சொல்ல வந்ததையே மறந்துவிட்டான். சாப்பிட்டுவிட்டு, அவன் புறப்படப்போனபோது, மைதிலி மீண்டும் குறுக்கிட்டாள். உட்காருங்க அண்ணா! ஓங்ககிட்டே ஒரு முக்கிய மான சமாச்சாரத்தைப் பேசனும். கூடப்பிறந்த அண்ண னிடம் சொல்லாததை ஒங்ககிட்டே சொல்லப்போறேன். நீங்கதான் எனக்கு அண்ணன் மாதிரியில்ல, அண்ணனே தான்! ஒங்க அத் தான், என் வீட்டுக்காரர் இருக்காரே, அவர் வெகுளி; ஆனால் மனசு சுத்தமானது. அதனால அவர் பேசியதை நீங்க தப்பாய் நினைக்கப்படாது. இப்படித்தான் வீட்டுக்கு ஒருநாள் வந்த என் அண்ணனையும்...' மைதிலி பேசிக்கொண்டே போனாள். கணவன், தன் அண்ணனை அடிக்கப் போனதில் இருந்து, கணவனை அண்ணன் அடிக்கப் போனது வரைக்கும், நேர்முக