பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் சிறிது நேரத்தில் சுந்தரமும் முத்தம்மாவும் தனித் தனியாய் வந்தார்கள். செல்வம் அவர்களை வெறுமையாகப் பார்த்தான். அடையாளம் கண்டுகொண்டது போன்ற லேசான தூக்கலான பார்வை. மீண்டும் பானுவை நினைத்ததுபோல் நெஞ்செலும்பை தொட்ட தலை, முத்தம்மாவால் பேச முடியவில்லை. சத்தம் போட்டு அழுதால் போலீஸ்காரர்கள் அடிப்பார்கள் என்று பயந்: தாளோ என்னவோ... முந்தானை முனையை பந்துபோல் சுருட்டி வாய்க்குள் திணித்தபடியே குலுங்கினாள். சுந்தரம் ஆவேசமாகப் பேசினார். கவலப்படாதிங்க சார்! எனக்கும் பெரிய இடத்துல ஆள் இருக்காங்க, ஒங்களையும் மீட்டி பேக்டரியையும் மீட்டிக் காட்டுறேன்! முத்தம்மா, எல்லா விஷயத்தையும் சொன்னாள் வேணுமுன்னால் பாருங்க. நீங்க நிற்கிற இடத்துல-பாஸ்கரும், அவள் ம ைன வி யு ம் நிற்கப் போறாங்க!' முத்தம்மா விக்கி விக்கிப் பேசினாள். நீங்களும் அம்மாவும் நைட்ல வந்தப்போ, மைதிலி என்னை ஒரு நாளும் இல்லாத திருநாளாய் வீட்டுக்குப் போகச் சொன்னதில் ஆச்சரியம் தாங்க முடியல! அப்புறம் அம்மா செத்தது தெரிந்து, நான் வீட்டுக்கு வந்தப்போ, மைதிலி சும்மா அழுதுகிட்டே, ஆம்புடையான் காதை அடிக்கடி கடிச்சாள். அப்போதான் - எனக்கு சந்தேகம் வந்தது. மைதிலி அம்மாவுக்கு பால் கொடுத்துட்டுக் கழுவாமல் போட்ட டம்ளரை எடுத்து வச்சிருக்கேன். இது சந்தேகமில்லாமல் .ெ கா ைல சாமி! ஒன் மச்சானும் மைதிலியும் அம்மாவை கூட்டாய் கொலை செய்திருக் காங்க. சொத்துக்கு ஆசைப்பட்டு- ஒங்க ஒரே சொத்தை கொன்னுட்டாங்கய்யா! நீங்களும் அம்மாவுமாய் சேர்ந்து எனக்காக வாதாடுனது இன்னும் இந்தப் பாழும் மனசில் அப்படியே நிற்கிறது சாமி!'