பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல்... கண்டக்டர்கள், டபுள் விசில் கொடுத்து ஒடுகின்ற காலம். பல்லவ பஸ் சக்கரவர்த்தி உதயமாகாத காலம், பஸ்கள் ஒன்றை ஒன்று முண்டியடித்து, மோதாக் குறை: யாய், தலைவிரி கோலமாய், தலையைத் துண்டிக்கும் கோல மாய் ஓடாத காலம். எல்லாவற்றிற்கும் மேலாக மாணவபஸ் ஊழியர் மகாயுத்தங்கள் தோன்றாத காலம். அப்போது சுடுகாடுபோல் இருந்த அடையாறு சாலை யில், நாணப்பட்டு மெதுவாய் நடக்கும் கல்யாணப் பெண்ணைப்போல், மெதுவாகப் போய்கொண்டிருந்த அந்த அரசாங்க பஸ்ஸ்ை, ஒரு சுற்றுலா பஸ் முந்த முயன்றபோது, பெண்கள் இருக்கையில், முதல் வரிசையில் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் எவரும் உட்கார முடியாதபடி நடுவில் அமர்ந்திருந்த மோகினி, என்ன டிரைவர், காலேஜ் பசங்க பஸ்... நம்ம பஸ்ஸை ஒவர்டேக் பண்றதா... நீங்க அத பொறுத்துக்கிட்டு இருக்கிறதா? சுத்த மோசம்' என்று குரல் கொடுத்ததும், ஸ்டியரிங்கில் தலையை வைத்துத் தூங்கலாமா என்று சிந்திப்பவர்போல் கிழட்டு மாடு மாதிரி அம்பேலாக இருந்த டிரைவர், குரல் வந்த திசையை எரிச்சலோடு பார்த்தார். குரல் கொடுத்தவள் இருபது வயதுக்காரி என்பதாலும், அவளின் எழிலான அதரங்கள் கெஞ்சுவதுபோல் பார்த்ததையும் நளினத்தோடு நாணமுங்.