பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 79 சிக்கிரமா எடும் தாத்தா! அந்தப் பசங்க கையை ஒடிக்கிறது மாதிரி உரசிக்கொண்டு போங்க ப்ளீஸ் சிக்கிரமா ஸ்டார்ட் பண்ணுங்கோ’’ என்றாள். ஒனக்கேண்டி திமிரு!" என்பது மாதிரி இதர பெண்களும், சரியான ராங்கிக்காரி' என்று கிழட்டுப் பிரயாணிகளும், நாமும் டிரைவரை உற்சாகப் படுத்தலாமா என்று அசல் இளைஞர்களும் இளைஞர் களாக தங்களை இன்னமும் நினைத்துக்கொண்டிருந்த முப்பத்தைந்து வயதுக்காரர்களும், சிந்தித்து தங்கள் சிந்தனைகளுக்கு ஏற்றாற்போல் முகபாவங்களைக் கோணல் மாணல்களாக வைத்துக்கொண்டிருந்தபோது, "தாத்தா" என்ற வார்த்தையைத் தகாத வார்த்தையாக எடுத்துக் கொண்ட டிரைவர், தான் தாத்தா இல்லை என்பதை நிரூபிக்க நினைத்தவராய், ஆக்ஸிலேட்டரை அழுத்த சுற்றுலா பஸ் பின்னுக்குத தள்ளப்பட்டது. மோகினி இப் போது மாணவ-பிரயாணிகளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் டாடா' காட்டியபோது, இதர பிரயாணிகள் முகத்திலும் களை கொட்டியது. அவர்களும், மாணவர் களுக்கு டாடா காட்டிவிட்டு, மோகினியை பிர்லாவின் பேத்தியைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள். ஆனால் சீனிவாசன் அவளை அப்படிப் பார்க்கவில்லை, அவள் பார்வை, தன் பக்கம் திரும்பும் போதெல்லாம் தன் ஆள்காட்டி விரலை எடுத்து நெஞ்சைத் தொட்டுவிட்டு, பின்பு அதே விரலை லேசாகத் தூக்கி வட்டம்மாதிரி செய்து, பின்பு நேராக நீட்டி அவள் இருக்கைக்கருகே இருந்த காலி இடத்தைச் சுட்டிக்காட்டி கண்களால் கெஞ்சினான். அதாவது, அவளருகே தான் வந்து அமரலாமா என்று சமிக்ஞை காட்டுகிறானாம். மோகினி அந்த சமிக்ஞையை கண்டுக்காமல் இருந்தபோது இன்னொரு சீட்டில் உட் கார்ந்திருந்த ஒரு போலீஸ்காரர், காலி இடத்தைச் சுட்டிக் காட்டியவனை காலியாக நினைத்து, கேஸ் கிடைக்கப் போகிற-அதுவும் மாதக் கடைசியில் கிடைக்கப் போகிறபெருமிதத்தில் அவனை நோக்கி நகர்ந்தபோது, விஷயத்