பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vií தமிழிலே சங்கநாதம் செய்தவர் சத்தியமூர்த்தி. இவர்களின் காலடிச் சுவடுகளை கண்ணில் ஒற்றி கடமையாற்றும் சமுத் திரத்தை இளைஞர் சமுதாயம் சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட செந்தமிழர் கூட்டம் என்றும் ஏற்கும்-பாராட்டும். இதே நேரத்தில் விளக்கிற்கு தூண்டுகோலாக பல நல்ல படைப்புகளை தமிழ் மக்களுக்குத் தந்து, சீரிய எண்ணங்களை வரிகளிலே வடித்துத் தரும், எண்ணற்ற எழுத்தாளர்களை ஊக்குவித்து வாழ்வளிக்கும் வானதி திருநாவுக்கரசு அவர் களைப்பற்றி நான் எண்ணாமல் இருக்க முடியாது. இந்து தியாலஜிகல் பள்ளியின் ஒன்பதாவது வகுப்பு மாண வனாக இருந்தபோது தம்பு செட்டித் தெருவில் இருந்தேன். மாலை நேரங்களில் தெருவில் விளையாடுவது உண்டு. ஒரு நாள் மூன்றாவது வீட்டிலிருந்த ஒருவர் அழைத்தார். 'தம்பி பள்ளியில் படிக்கும் நீ எழுத்தாளனாகலாமே என்றார். அந்தக் காலகட்டத்தில் வை. கோவிந்தனின் அணில் பள்ளி மாணவர் களின் சொத்தாக இருந்தது. எனக்கு எழுத வராதுங்க" என்றேன். நிச்சயம் வரும்-முயற்சி செய்-நாளை வந்து பார்’ என்றார். காளிதாசனின் நாவில் அன்னை எழுதியவுடன் காளி தாசன் கவிமேகமானான் என்பதுபோல் மறுநாளே எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. இவ்வளவிற்கு நான் தமிழில் முப்பதுக்கும் குறைவாக மதிப்பெண் பெறுபவன். 'டேய், நான் தேன் சொட்டச் சொட்ட ஒரு கதை எழுதியிருக்கேன்-படிக்கிறேன் கேளுடா’-இது ஒரு நண்பன். "வேண்டாம்டா-வீடெல்லாம் எறும்பு வந்திடும்-வா வீதிக்குப் போவோம்-அங்கே படி' இதுதான் என் கன்னிப் படைப்பு-கண்ணுற்ற அவர் 'தம்பி ஜோராக இருக்கிறது-ஜில் ஜில் பத்திரிகையில் வரும் பார்'