பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சு சமுத்திரம் இருவரும் ஒரு தோணிக்கருகே வந்து உட்கார்ந்தார்கள். காலை ஒன்றுக்குமேல் ஒன்றாக மடக்கி இடது கையை ஊன்றி அதில் லேசாகச் சாய்ந்துகொண்டு உட்கார்ந்த மோகினி, வலது கையால் தன்னைச் சுற்றி ஒரு வட்டக் கோட்டைப் போட்டாள். சீனிவாசனுக்கு அந்தக் கோட்டின் அர்த்தம் புரியும், அந்தக் கோட்டுக்கு உள்ளே அவனோ அவன் கைகால்களோ போகக்கூடாது என்கிற தடைக்கோடு அது. இன்னிக்கி இந்தக் கோட்டைத் தாண்டி வராட்டா என்பேரு சீனியில்ல' என்று தினமும் சொல்லி பின்னர் அவள் கண்களின் உருட்டலுக்குப் பயந்து. கிழித்த கோட் டைத் தாண்டாத அவன், அன்று பேசாமல் சவலைப் பிள்ளைமாதிரி உட்கார்ந்திருந்ததில் மோகினி ஆச்சரியப் பட்டாள். சிரித்துக்கொண்டே கேட்டாள். "ஏன் உம்முன்னு இருக்கிங்க! என்ன வந்தது உங்களுக்கு? அவனவன் காதலிச்ச மூணு நாளையில் ஒண்ணா உக்காருராங்க. தோளோட தோள் இடிக்கும்படியா நடக் கறாங்க. நீ என்னடான்னா... சொல்லுங்க! என்னடான்னா... என்னை நீ நேராவே டா’ போடலாமே... அளவுக்கு மீறிப்போனா அதுவும் போடுவேன் இல்ல, சொல்ல வந்ததைச் சொல்லுங்க." நீயே சொல்லு: நாம மூணு வருஷமா பழகுறோம். ஒரு நாளாவது உன் பக்கத்துல உட்கார விடுறியா!' நெருப்பைப் பஞ்சு பக்கத்துல விடப்படாது.

  • எதுக்கும் பொருத்தமா பேசிடுவே! என் மனசு ஒனக்கு புரியமாட்டேங்குது. ஒன் பக்கத்துல உட்கார்ந்து சினிமா