பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 83 வுக்குப் போகணும்னு மூணு வருஷமா நினைக்கிறேன். முடிஞ்சுதா உண்மையிலேயே நீ ஒரு யந்திரமா இருப்பி யோன்னுகூட நினைக்கத் தோணுது!" மோகினி அவனை யந்திரம்போல ஆடாது அசையாது பார்த்தாள் அந்தப் பார்வையில் அவன் யந்திரமயமானவன் போல் இருந்தபோது, அப்பாகிட்ட சொல்லிட்டிங்களா" என்றாள் அமைதியாக. சீனிவாசன் பேசாமல் இருந்தான். மோகினி பொரிந்தாள். எத்தன தடவங்க ஒங்களுக்குச் சொல்றது. அப்பா கிட்ட சொல்லிக் கல்யாணம் பண்ணிக்கத் தைரியம் இல்லை. என்கிட்ட காட்டற கோபத்தை அவர் கிட்ட காட்டியிருந்தா நான் இப்படிக் கோபப்படவேண்டிய அவசியம் வந்திருக் காது, இன்னைக்கு எனக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும். ஒங்களால எனக்குத் தாலிகட்ட முடியுமா முடியாதா? ஒங்களால வெட்டியா இருக்கவும் முடியாது, என்னால வெட்டியா வரவும் முடியாது. ஒரு தாலிக்கயிறு இல்லாத தால நான் படுற பாடு எனக்குத்தான் தெரியும்!" என்ன சொல்ற?" சுண்டக்காய்க்கு உப்பில்லென்னு சொல்றேன். எங்க மானேஜர் சுந்தரத்தோட பார்வை சரியில்ல! பாவிப்பய சொந்த பெண்டாட்டிய கூட அப்டிப் பார்க்கமாட்டான். அப்டி உரிமையோட பேசமாட்டான். ஒரு தாலிக்கயிறு இருந்தாலாவது ம ன ம் மாறுகிறானான்னு பாக்கப் போறேன்!" நான்தான் ஒனக்குப் படிச்சிப் படிச்சிச் சொன்னேன். அவன் கூப்புடுற நேரத்துல்லாம் ஆபீஸ் ஆபீஸின்னு போனா இப்படித்தான் நடக்கும்!" என்னங்க நீங்க, பையன்மாதிரி பேசுpங்க. எங்க கம்பெனில..."